வி.ஜே அர்ச்சனா கேட்ட கேள்வி.. அவரை போல உலகத்தில் யாரும் இல்லை! கதறி அழுத பாடகி சைந்தவி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றிருக்கிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பாடல்களை டெடிகேஷன் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஜே அர்ச்சனா பாடகி சைந்தவி இடம் கேட்ட கேள்விக்கு சைந்தவி கண்கலங்கி அழுதிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பாடகி சைந்தவி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை ஸ்கூல் படிக்கும்போதே காதலித்து 2013 ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகு இந்த தம்பதிக்கு கடந்த 2020இல் ஒரு மகள் பிறந்திருக்கிறார். இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த மே மாதத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக இணையத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தனர்.

இதனால் இவர்கள் பற்றி அதிகமான செய்திகள் இவர்களைப் பற்றி பரவி வந்தது. இவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணம் அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் கோபமான சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் தங்களைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட்களுக்கு போஸ்ட் போட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதே நேரத்தில் ஜிவி பிரகாஷ் தான் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இசையமைத்துக் கொண்டிருக்கும் பாடல்கள் போன்றவற்றின் அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சைந்தவி ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்று இருக்கிறது.
அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பாடல்களை டெடிகேஷன் செய்து கொண்டிருந்தனர். அப்போது போட்டியாளர் ஸ்வேதா தன்னுடைய தந்தைக்கு "ஆனந்த யாழை" பாடலை டெடிகேஷன் செய்திருந்தார். அதோடு தன்னுடைய தந்தை தான் பாடுவதை மோட்டிவேஷன் செய்யவில்லை, அவருக்கு என் மீது பாசம் இருக்கிறதா? என்று தெரியவில்லை என்று ஒரு கடிதத்தில் எழுதி இருந்த நிலையில் அதை படித்த ஸ்வேதாவின் தந்தை என் மகள் மீது எனக்கு அதிகமான பாசம் உண்டு.
ஆனால் அதை நான் வெளியே காட்டியது இல்லை. அவளுக்கு நான் சப்போர்ட் செய்யாமல் இருந்தது தவறு என்று மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பார்த்து பாடகி சைந்தவி கண்கலங்கி கொண்டிருந்தார். அப்போது வி.ஜே அர்ச்சனா சைந்தவியிடம் உங்களுடைய அப்பா உங்களுக்கு எப்படி சப்போர்ட் பண்ணுவார் என்று கேட்க, அதற்கு அழுது கொண்டே பேசிய சைந்தவி, நான் இன்று இவ்வளவு வளர்ந்து இருப்பதற்கு இப்படி இருப்பதற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பா தான்.
என்னுடைய அப்பா என்னுடைய சின்ன சின்ன விஷயத்திற்கும் மோட்டிவேஷன் செய்து கொண்டே இருப்பார். நான் ஒவ்வொரு விஷயங்கள் செய்யும்போது சரி எது தவறு என்று என்னை வழிநடத்துவது அவர்தான் என்று பேசியிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு சைந்தவியின் அப்பாவும் வந்திருந்தார். அப்போது தன்னுடைய தந்தையை பார்த்ததும் சைந்தவி அவருடைய கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார்.
அதோடு தன்னுடைய தந்தை குறித்து சைந்தவி பெருமையாக பேசி இருக்கும் நிலையில் சைந்தவி குறித்து அவருடைய தந்தையும் என்னுடைய மகள் தான் என்னுடைய வீட்டின் தேவதை. அவளுக்காக நான் எதை வேண்டும் என்றாலும் செய்வேன். அவளுடைய சந்தோசம்தான் எங்களுக்கு முக்கியம். அவள் சின்ன சின்ன ஈவண்டில் கலந்து கொள்ளும் போதும் நான் அங்கு சென்று அவளை என்கரேஜ் செய்துக்கொண்டே இருப்பேன் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications