சரிகமப மேடையில் சைந்தவி கேட்ட கேள்வி.. கண் கலங்கிய அருளினி.. நெகிழ வைத்த தருணம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டு நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் இசையும் காதலும் சுற்று நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக இணைந்து பாடல்களை பாட உள்ளனர். போட்டியாளர்களை தனித்தனியாக மதிப்பிட்டு மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் அருளினி, "சுத்தி சுத்தி வந்தீங்க" என்ற பாடலை பாடி நடுவர்களை அசர வைத்துள்ளார். அதன் பிறகு சைந்தவி மேடைக்கு வந்து நீ இதெல்லாம் கேட்டயாமே என்று சொல்லி சில பொருட்களை கொடுக்க அதை பார்த்ததும் அம்மா வந்திருக்காங்களா? அம்மா அனுப்பிய மாதிரியே இருக்கு என்று சொல்ல அவரது அம்மா என்ட்ரி கொடுத்து 7 வயசு வரை பேசாத அருளினி இணைக்கு பல மொழிகளில் பேசுறா என்று பெருமையாக பேசியுள்ளார். அம்மா மகளின் பாசத்தால் அரங்கமே கண் கலங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து, "உருகி உருகி போனதடி என் உள்ளம்" பாடலை பாடி கவர்ந்த ஹமன் வழக்கம் போல அரைகுறை தமிழில் பேசி அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார். உடம்பு முடியாத நிலையில் சிறப்பாக பாடி பாராட்டுகளை பெற்றுள்ளார்.
மரக்காணம் சரண், "கோடி அருவி கொட்டுதே" என்ற பாடலை பாடி முதல் முறையாக கோல்டன் ஷவரை பெற்றுள்ளார். அதே போல் முகேஷ் மற்றும் பொக்கிஷா ஆகியோர் இணைந்து "பூக்கள் பூக்கும் தருணம்" என்ற பாடலை பாடி நடுவர்களை கவர்ந்துள்ளனர்.
சரத், சாரங்காவுடன் இணைந்து "பூக்கள் பூக்கும் தருணம்" பாடலை பாடி அசத்த சரத்தின் திறமையை மீண்டும் நடுவர்கள் சுட்டி காட்டி பாராட்டியுள்ளனர். இப்படி பல நெகிழ்ச்சியான தருணங்களுடன் சரிகமப நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications