நடந்து முடிந்த சரிகமப சீசன் 4 பைனல்.. டைட்டிலை வென்றது யார் தெரியுமா? அதுவும் பரிசு இத்தனை லட்சங்களா
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.
மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு போட்டியாளர்களை மதிப்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நேற்று நேரடியாக ஒளிபரப்பானது. இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருந்த ஆறு போட்டியாளர்களும் கடுமையாக போட்டி போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இறுதியாக இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மகிழன் தேர்வாகி உள்ளார். அவருக்கு பரிசு தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் ரன்னராக வடசென்னையை சேர்ந்த ஸ்வேதா மற்றும் இரண்டாவது ரன்னராக விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி மக்களின் தேர்வு என்ற அடிப்படையில் நான்காவது பிடித்துள்ளார் மரக்காணம் சரண். இவர்களுக்கு மக்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்த சரிகமப கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications