இந்த வார சரிகமபவில் இருந்து வெளியேற போவது யார்? மண் வாசனை சுற்றில் நடந்தது என்ன? முழு அப்டேட் இதோ
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்டு முடிவடைந்ததை தொடர்ந்து மண்வாசனை ரவுண்டு தொடங்கி இருக்கிறது. இதில் யார் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த வாரத்திலும் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றது. இதில் பல அழுகாட்சி காட்சிகள் தான் ஏகத்துக்கும் இருந்தது. டெடிகேஷன் ரவுண்டு என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பது எல்லா சீசன்களிலும் தொடர்ந்து வருகிறது.
அதற்கு இந்த சீசனிலும் விதிவிலக்கல்ல என்பதை கடந்த வாரத்தில் நிரூபித்து இருந்தார்கள். கடந்த வாரத்தில் தனக்கு சப்போர்ட் செய்யாத தன்னுடைய தந்தை குறித்து ஸ்வேதா ஒரு லெட்டர் எழுதி அவருக்காக ஒரு பாடலையும் டெடிகேஷன் செய்து இருந்த நிலையில் அவருடைய தந்தை
மேடையிலேயே கண்கலங்கி அழுதது, பிறகு ஸ்வேதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது பலரையும் பீல் பண்ண வைத்தது.
கடந்த இரு வாரங்களாக டெடிகேஷன் ரவுண்ட் நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த வாரம் மண் வாசனை சுற்று, விலேஜ் போல்க் ரவுண்ட் என்ற பெயரில் நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் சிலர் ஜோடியாக இணைந்தும் சிலர் தனித்தும் பாட உள்ளனர். சரத் "சாந்து பொட்டு" பாடலை பாடி கோல்டன் ஷவரை வென்றுள்ளார்.
அதே போல் இந்திரஜித் மற்றும் அருளினி ஆகியோர் இணைந்து "தாமரை பூவுக்கும்" பாடலை பாடி கோல்டன் ஷவரை வென்றுள்ளனர். வீரப்பாண்டி, கோபிகா ஆகியோர் "இஞ்சி இடுப்பழகி" பாடலை இனிமையான குரலில் பாடி மொத்த அரங்கத்தையும் கவர்ந்துள்ளனர்.
பாடல்கள் மட்டுமின்றி கலக்கலான கலாட்டாக்களும் இந்த வார நிகழ்ச்சியில் நடந்துள்ளது. அதாவது இந்திரஜித் போட்டியாளர்கள் போல் நடித்து காட்டியது மட்டுமின்றி நடுவர்களையும் இமிடேட் செய்துள்ளார். அடுத்து மேடைக்கு வந்த விஜய் லோஷன் இந்திரஜித் போல் நடித்து காட்டியதோடு நடுவர் கார்த்திக்கை இமிடேட் செய்துள்ளார்.
இறுதியாக எலிமினேஷனும் நடந்துள்ளது. ஆமாம், பொக்கிஷா, சாரங்கா உட்பட சிலர் டேஞ்சர் சோனில் இடம் பெற்று இருப்பதாகவும் அதில் ஒருவர் வெளியேறப்போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே சரிகமப நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications