Selvaraghavan: செல்வராகவன் இரண்டாவது மனைவியை பிரிகிறாரா? சோசியல் மீடியாவில் கீதாஞ்சலி செய்த செயல்!
சென்னை: இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை முதல் திருமணம் செய்திருந்தார். ஆனால் அவருடைய திருமணம் சில வருடங்களில் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இயக்குனரும் தயாரிப்பாளருமான கீதாஞ்சலியை இரண்டாவது திருமணம் செய்திருந்தார். ஆனால் இப்போது கீதாஞ்சலி செய்த செயல் இவரையும் செல்வராகவன் பிரிந்து விட்டாரா என்று ரசிகர்களை கேட்க வைத்திருக்கிறது.
இயக்குனர், கதை ஆசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்ட செல்வராகவன் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி அவர் தத்துவமாக பேசி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதோடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவார். ஆனால் இப்போது செல்வராகவன் பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கினார். முதல் படமே அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடிகை சோனியா அகர்வாலை அறிமுகம் செய்து வைத்தார். அந்த திரைப்படத்திலும் முதல் படத்தைப் போலவே தன்னுடைய தம்பியைத்தான் நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தில் போது சோனியா அகர்வாலுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து 7G ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை போன்ற படங்களிலும் சோனியா அகர்வால் நடித்திருந்தார். பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
சூழல் எப்படி இருக்க சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன் 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் இரண்டு மகனும் இருக்கின்றனர். செல்வராகவன் இப்போது அதிகமான படங்களை இயக்கவில்லை என்றாலும் தனித்துவமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடிப்பது ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக வாழும் செல்வராகவன்.. மறுமணம் குறித்து பேசிய சோனியா அகர்வால்
இந்த நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கீதாஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார். இதனால் இருவரும் விவாகரத்து செய்து பிரிய போகிறார்களா என்று கேள்விகள் எழுந்து வருகிறது. காரணம் சமீப காலமாகவே திரை பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் போஸ்ட்களை டெலிட் செய்து தாங்கள் பிரிவதை அறிவித்து வருகிறார்கள். அதேபோல இப்போது கீதாஞ்சலியும் செய்கிறாரா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதேபோல செல்வராகவன் பற்றிய செய்திகள் பரவி வந்தபோது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்வராகவன் தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இப்போதும் இது பற்றிய வதந்திகளுக்கு செல்வராகவன் அல்லது கீதாஞ்சலி விளக்கம் கொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications