Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக வாழும் செல்வராகவன்.. மறுமணம் குறித்து பேசிய சோனியா அகர்வால்

எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை பொருத்தமான நபரை சந்திக்கும் போது திருமணம் நடக்கலாம் என்று சோனியா அகர்வால் கூறி இருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து பின்பு இருவருக்கும் விவாகரத்து ஆகி இருக்கிறது.

இந்த நிலையில் விவாகரத்திற்கு பிறகு எஸ்பிபி சரணோடு சோனியா அகர்வால் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் அது உண்மையல்ல பொருத்தமான நபரை சந்திக்கும் போது திருமணம் நடக்கலாம் என்று சோனியா அகர்வால் கூறி இருக்கிறார்.

திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும்

நடிகை சோனியா அகர்வால் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவனை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை 2010 வரைக்கும் மட்டும் தான் நீடித்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக பேசி பின்பு விவாகரத்தும் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் எழுத்தாளராக இருந்த செல்வராகவன் தனுஷ் அறிமுகமான துள்ளுவதே இளமை என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக ஆனார். அதற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் தான் சோனியா அகர்வால் ஹீரோயினியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

காதல்

காதல்

பின்பு 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்களை செல்வராகவன் இயக்கி இருந்தார். இந்த நிலையில் சோனியா அகர்வாலுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்த திரைப்படங்களில் 7ஜி ரெயின்போ காலனி, புதுக்கோட்டை திரைப்படமும் உண்டு. இந்த திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக வேலை செய்யும் போது தான் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு செல்வராகவன் மறுமணம் செய்து கொண்டார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

திருமணத்திற்கு பிறகு சோனியா அகர்வாலுக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காததால் குணச்சித்திர வேடங்களிலும், கவர்ச்சி கேரக்டர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் வெப் சீரிஸ் களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதில் இவர் பாடகர் எஸ்.பி.பி சரன் உடன் ஒன்றாக நடித்திருந்தார். அப்போது அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இவர்கள் இருவரும் திருமணம் செய்ய போகிறார்களா? என்று கிசுகிசுக்கப்பட்டது.

திருமணம் பற்றி விளக்கம்

திருமணம் பற்றி விளக்கம்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சோனியா அகர்வால், எஸ்பிபி சரன் உடன் நடித்த திருமண காட்சி புகைப்படம் வெளியாகி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. எனக்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று விசாரித்தார்கள். அதற்கு நான் இல்லை என்று மறுப்பு சொன்னேன். எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை. பொருத்தமான நபரை சந்திக்கும் போது திருமணம் நடக்கலாம். இதுவரை அப்படிப்பட்டவரை சந்திக்கவில்லை. அந்த நபருக்காக காத்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+