20 வருஷமா காதலிச்சோம்.. குழந்தை இல்ல.. சினிமாவில் சிலர் எங்களை.. ராஜசேகர்- திலகம் தம்பதி எமோஷனல்
சென்னை: பல சீரியல்களில் நடித்த பிரபலம் அடைந்த நடிகர் ராஜசேகர் அவருடைய மனைவி திலகம் இவர்கள் இருவருக்கு சமீபத்தில் தான் சதாபிகேஷம் நடந்தது.
அதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களிடம் வாழ்த்து பெற்றிருந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக அவர்கள் தங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பேசி இருக்கின்றனர்.

அதில் தாங்கள் 20 வருடங்களாக காதலித்து பிறகு திருமணம் செய்து 20 வருடங்கள் கழித்து தங்களுடைய நிலைமை எப்படி இருக்கிறது என்று மனம் திறந்து பேசி இருக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம்.
அந்த வகையில் நடிகர் ராஜசேகர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனாலும் இவர் சினிமாவுக்கு எதார்த்தமாகத்தான் வந்தாராம். 1962 ஆம் ஆண்டு இவருக்கு எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை கிடைத்திருக்கிறது. அதற்காகத்தான் இவர் சென்னைக்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் இவருடைய நண்பர்கள் நீ அழகாக இருக்கிறாயே சினிமாவிற்கு முயற்சி செய்யலாம் என்று இவரிடம் சொல்ல அந்த ஆசை இவருக்குடைய மனதிற்குள் ஏற்பட்டு விட்டதாம்.
அதுபோல ராஜசேகரின் நண்பர் தான் அசோகனாம். இவருக்கும் அவர் மூலமாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அசோகனின் டிராமா குரூப்பில் தான் இவர் சேர்ந்து இருக்கிறார். அப்போ அந்த டிராமாவில் இவர் நடிச்ச பல டிராமாக்கள் சினிமா படமாக மாறி இருக்கிறது. அதுபோல அந்த டிராமா பல விருதுகளும் வாங்கியதாம். அப்படித்தான் இவர் டிராமாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறார்.
ஏற்கனவே இவர் வேலையும் பார்த்துக் கொண்டிருந்ததால் அதிகமான சினிமாவில் நடிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அப்போது 80 படங்களும் 300க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதுபோல நடிகர் ராஜசேகரின் மனைவியான திலகம் ராஜசேகரனை விட நடிப்பில் சீனியர் தானாம். ஏனென்றால் அவர் தன்னுடைய 15, 16 வயசிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டாராம். அந்த வயசில் ரெண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் 20 வயசிலேயே ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க வந்து விட்டாரா. அதோடு எம்ஜிஆர், சிவாஜி என எல்லா நடிகர்களோடும் அம்மா கேரக்டரில் திலகம் நடித்திருக்கிறார். ஆனாலும் திலகத்திற்க்கு இருவது வயசிலேயே இவ்வளவு பெரிய நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கிறோமே என்ற வருத்தம் வந்ததே இல்லையாம். காரணம் நடிப்பு என்பது ஒரு தொழில் அதை செய்யப் போகிறோம். அதனால் என்ன என்று நினைத்திருக்கிறார். அப்படி இவர்கள் இருவருடைய நடிப்பு வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கும் போது தான் இவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
நடிகர் ராஜசேகரும் நடிகை திலகமும் அசோகன் குரூப்ல தான் முதல் முறையாக சந்தித்துக் கொண்டார்களாம். இருவருக்கும் அப்போது ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டதால் இருவரும் காதலை சொல்லி இருக்கின்றனர். பிறகு திலகம் குடும்ப சூழ்நிலையால் உடனே திருமணம் செய்ய முடியாமல் போய்விட்டதாம். அவருடைய அம்மா சித்தி எல்லாரையும் திலகம் ஒருவருடைய சம்பளத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அதனால் இவர்களுடைய திருமணம் 20 வருடங்களாக காதலித்து பிறகு நடைபெற்றிருக்கிறது.
திருமணத்தின்போது ராஜசேகருக்கு 45 வயதும் திலகத்திற்கு 43 வயதும் இருந்ததாம். அதற்குப் பிறகு இப்போது இவர்களுக்கு 80 வயது ஆகிறதாம். சதாபிஷேகம் செய்து கொண்டாடி இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை இல்லையாம். வருத்தம் மனதிற்குள் இருந்தாலும் எனக்கு அவளும், அவளுக்கு நானும் குழந்தை என்று ராஜசேகர் கூறி இருக்கிறார்.
அதோடு சினிமா துறையில் பலர் எங்களை அம்மா, அப்பா என்று கூப்பிட்டு வருகிறார்கள். அப்படி பார்க்கையில் எங்களுக்கு அதிகமான குழந்தைகள் இருக்கிறது. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது சில வருடங்களாக சினிமா சீரியல்களை கொஞ்சம் தவிர்த்து இருந்தோம். ஆனாலும் நல்ல கதை வந்தால் கண்டிப்பாக நாங்கள் நடிப்போம் என்று சந்தோஷத்தோடு ராஜசேகர் மற்றும் திலகம் தம்பதி பேசி இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications