4 நாட்களுக்கு முன்னாடிகூட மகள் பற்றி அப்படி பேசினாரு! நேத்ரன் பற்றி பல விஷயங்களை பகிர்ந்த சக நடிகர்
சென்னை: சீரியல் நடிகர் நேத்ரன் நேற்று காலமானார். அவர் பற்றி அவரோடு நடித்த நடிகர்கள் நண்பர்கள் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் சீரியல் நடிகர் சத்யா, நேத்ரன் நான்கு நாட்களுக்கு முன்பு என்ன பேசினார் என்று கண் கலங்க பேசி இருக்கிறார்.
இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். இறப்பை வென்றவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்றாவது ஒருநாள் எல்லோருக்கும் இறப்பு வர தான் செய்யும். ஆனால் நமக்கு பிடித்தவர்கள் நாம் பார்த்து வியந்தவர்கள் உடைய இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் நேற்று சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் என்றால் நடிகர் நேத்ரனின் மரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

கனமழை காரணமாக ஒரே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரை விட்ட சோக சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையுமே அதிர வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் நேத்ரனின் இறப்பு செய்தியும் வெளிவந்து பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது.
சீரியல் நடிகர் நேத்ரன் விஜய் டிவியில் பொன்னி, பாக்கியலட்சுமி உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அவருடைய மனைவி தீபா நேத்ரன் சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதுபோல ஜீ தமிழில் மாரி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் விஜய் டிவி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தீபா மற்றும் நேத்ரன் தம்பதிக்கு அபிநயா அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் அபிநயா கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப் சீரிஸில் நடித்து இருந்தார். அதுபோல தன்னுடைய தந்தையோடு சேர்ந்து ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஆடி டைட்டிலும் ஜெயித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனின் மகள் தன்னுடைய தந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கும் தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர். ஆனால் தன்னுடைய தந்தை இதிலிருந்து மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கையோடு சில தினங்களுக்கு முன்பு கூட அபிநயா பேட்டியில் பேசியிருந்தார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று நேத்ரன் இயற்கை எய்தினார். அவரோடு சீரியலில் நடித்த பல நடிகர்கள் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அப்போது அவர் பற்றி பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் சில தகவல்களை சொல்லியிருந்தார்.
அதாவது நேத்ரனை எனக்கு 22 வருடங்களாக தெரியும். நேத்ரன் எப்போதுமே சிரித்த முகமாகத் தான் இருப்பார். அவருடைய கோபமான முகத்தை நான் இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. நான் கூட அவரிடம் கோபப்பட்டு இருக்கிறேன் ஆனால் அவருக்கு அப்படியெல்லாம் கோபம் காட்ட தெரியாது. ரொம்பவும் நல்ல மனிதன் என்று பேசி இருந்தார்.
அவரைத் தொடர்ந்து நேத்ரனுடன் சீரியலில் நடித்த நடிகர் சத்யா பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நேத்ரன் கலைஞர் டிவியில் ரஞ்சிதமே சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அந்த சீரியலில் அவருக்கு பதிலாக என்னை நடிக்க சொல்லி இருந்தார்.

மலைக்கு போயிட்டு வரேன்னு சொன்னேனே! இப்படி ஆகிடுச்சே.. நேத்ரன் இறப்பு பற்றி பதிவு வெளியிட்ட நடிகர்
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கூட அவர் இந்த நோயிலிருந்து நான் மீண்டு வந்து விடுவேன் என்று தான் தைரியமாக பேசியிருந்தார். என்னுடைய இரண்டாவது மகளின் பிறந்தநாள் விரைவில் வர இருக்கிறது, எல்லோருக்கும் என் கையால் நான் சமைத்துக் கொடுப்பேன் எல்லோரும் வந்துவிட வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் இப்படி ஆகும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.
அதுபோல நேத்ரன் சமையலை சின்னத்திரையில் சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள். அவர் அருமையாக சமைப்பார். அவர் செய்த சமையலை எல்லோருக்கும் கொடுத்து அவர்கள் சாப்பிடுவதை ரசிப்பார். ரொம்பவும் இனிமையான மனிதர் ஆனால் அவரை எதற்காக கடவுள் இவ்வளவு சீக்கிரமாக கூப்பிட்டார் என்று தெரியவில்லை. அவருடைய இரண்டு மகள்களும், மனைவியும் இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று சத்யா பேசியிருக்கிறார்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications