சிறகடிக்க ஆசை சீரியலை விட்டு விலகுகிறாரா முத்து? அவரே கொடுத்த விளக்கம்.. காரணம் இதுதானாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக முத்து கேரக்டரில் நடிகர் வெற்றி வசந்த் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் 300 வது எபிசோடு வெற்றியை தொடர்ந்து லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
அப்போது வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து எப்போது விலகுவேன் என்று ஒரு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதுதான் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்த சீரியல் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.
அந்த வகையில் முத்துவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் வெற்றி வசந்த் கடந்த வாரத்தில் இந்த சீரியல் 300 எபிசோடுகளை எட்டியதும் அந்த மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார். சிறகடிக்க ஆசை சீரியலில் 300 வது எபிசோடை கொண்டாடும் பொருட்டு தான் மீனா மற்றும் முத்துவுக்கு மீண்டும் திருமணம் நடப்பது போல ஒரு மகிழ்ச்சியான எபிசோட்டை வைத்திருந்தனர்.
அதை தொடர்ந்து இப்போது அடுத்தடுத்து அதிரடியான பிரச்சனைகள் வெடிக்க இருக்கிறது. ஏற்கனவே இன்றைய எபிசோடில் அண்ணாமலை மருத்துவமனையில் இருக்கிறார். அதனால் முத்துவுக்கும் ஸ்ருதிக்கும் சண்டை வருகிறது. அதுபோல அடுத்ததாக மீனாவின் தம்பிதான் விஜயாவின் பணத்தை திருடிட்டு போனது என்ற உண்மையையும் முத்து கண்டுபிடிக்கிறார். இப்படியான நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி இன்ஸ்டாகிராம் லைவில் வெற்றி வசந்த் பேசியிருந்தார்.
அப்போது அவர் பேசுகையில் ஏற்கனவே நான் இதுபோல லைவில் வந்திருக்கிறேன். ஆனால் நூறாவது எபிசோடு முடிவு லைவில் வந்தேனா என்பது எனக்கு நினைவில்லை. ஆனால் 200வது எபிசோடு அன்று லைவில் வந்து இருந்தேன். அதுபோல என்னுடைய பிறந்தநாளுக்கும் ஒரு லைவில் வந்து ரசிகர்களிடம் பேசி இருந்தேன். அதற்குப் பிறகும் பலர் எனக்காக கமெண்ட் போட்டுக் கொண்டே இருந்தீங்க என்னால் பதில் தான் கொடுக்க முடியல.
அதனால இன்னைக்கு கொஞ்ச நேரம் உங்க கூட பேசலாம்னு இருக்கிறேன். உங்களுடைய கேள்விகளை கேளுங்க நான் அதற்கு பதில் சொல்கிறேன் என்று சொல்ல, அதற்கு மக்கள் பல கேள்விகளை கேட்டு வந்தனர். அதில் ஒரு ரசிகர் நாங்க உங்களை எப்படி பார்க்கலாம் என்று கேள்வி கேட்க அதற்கு வெற்றி நான் இப்போ சிறகடிக்க ஆசை சீரியல் மட்டுமல்லாமல் சில வெப் சீரிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதை திரையில் நீங்கள் பாருங்கள். அதில் எனக்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள் என்று பேசி இருந்தார். அதைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் நீங்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இனி இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா? இல்லை என்றால் எப்போது இந்த சீரியலில் இருந்து விலகுவீர்கள்? என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதற்கு வெற்றி நீங்கள் நல்ல கேள்வி கேட்டிருக்கீங்க, நான் இப்ப பேசுறதை நீங்க ரெக்கார்டு கூட பண்ணி வச்சுக்கலாம். ஏன்னா நான் இந்த சீரியலில் இருந்து எப்போதுமே விலக மாட்டேன். இந்த சீரியல் இன்னும் எத்தனை வருடம் ஒளிபரப்பானாலும் சரி அதில் சுபம் என்ற ஒரு வார்த்தை வரும் வரைக்கும் நான் கதாநாயகனாக இருந்து கொண்டே இருப்பேன். இந்த சீரியல்தான் எனக்கு ஒரு மறு வாழ்க்கையை தந்தது.
அதனால் நான் இதை விட்டுப் போக மாட்டேன் எனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்புகள் வந்தாலும் அது சைடாகத்தான் வைத்துக் கொள்வேனே தவிர எனக்கு எப்போதும் இது சிறகடிக்க ஆசை சீரியல் தான் மெயின் வேலை இதை விட்டு போற எண்ணமே கிடையாது என்று தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications