பீரியட்ஸ் நேரத்திலும் செக்ஸ்..?சம்யுக்தா குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்த விஷ்ணுகாந்த்
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் பற்றி அவருடைய மனைவி சம்யுக்தா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தற்போது விஷ்ணுகாந்த் பதில் கொடுத்திருக்கிறார்.
அதில் விஷ்ணுகாந்த்க்கு 24 மணி நேரமும் ரொமான்ஸ் பண்ணனும் என்று சம்யுக்தா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதுபோல தான் பீரியட்ஸ் வலியில் துடித்த போது தன்னிடம் விஷ்ணுகாந்த் மேலும் கஷ்டப்படுத்துற மாதிரி நடந்து கொண்டார் என்றும் குற்றசாட்டுகளை வைத்திருந்தார்.
அது குறித்து விஷ்ணுகாந்த் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பது, சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சனை தான். இவர்கள் இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து சில மாதங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை இன்ஸ்டாகிராம் லைவ் மூலமாகவும் youtube சேனல்களில் பேட்டி மூலமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருவரை மாற்றி ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஆரம்பத்தில் ஜாடை மாடையாக ஸ்டோரி வைத்தும் போஸ்ட் போட்டும் தங்களுடைய கோபத்தை காட்ட ரசிகர்களுக்கு இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது புரிந்து கொள்ள முடியாமல் இருந்த நிலையில் முதல் முறையாக விஷ்ணுகாந்த் youtube சேனலில் பேட்டி கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து லைவில் விஷ்ணுகாந்த் பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் சம்யுக்தா தனக்கு இருக்கும் கோபத்தை எல்லாம் கொட்டியிருந்தார். சுமார் 2 மணி நேரமாக லைவில் சம்யுக்தா விஷ்ணுகாந்த் youtube சேனல்களுக்கு கொடுத்த பேட்டிகளுக்கு பதிலடியாக பல தகவல்களையும் கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய குடும்ப பிரச்சனை பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் லைவில் சம்யுக்தா விஷ்ணுகாந்த் 24 மணி நேரமும் ரொமான்ஸ் மூடில் தான் இருப்பார் என்றும் அதனால் எங்க அப்பா வீட்டிற்கு வருவது தான் அவருக்கு டிஸ்டர்பன்ஸாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அதுபோல தனக்கு பீரியட்ஸ் டைமில் வலி அதிகமாக இருக்கும் அப்போது கூட விஷ்ணுகாந்த் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும் அந்த வீடியோவில் பேசி இருந்தாராம்.

இதற்கு மறுப்பு தெரிவித்து விஷ்ணுகாந்த் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் எப்போதுமே சம்யுக்தா எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் வயிறு வலி அதிகமாக இருக்கும் என்று கூறுவார். அப்போதும் அப்படித்தான் அன்று கூறிக் கொண்டிருந்தார். நான் சரி நீ படுத்துக்கோ என்று அவருடைய சீரியல் ஓடிக்கொண்டிருந்தது அதை பார்ப்பதற்காக போகிறேன் என்று சொன்னேன். ஆனால் அப்போது கோபமாக சம்யுக்தா திட்டி சண்டை போட்டார்
அப்போ இப்போ மட்டும் உன்னால் இவ்வளவு வலியிலும் சத்தமாக பேச முடிகிறதா? அப்போ நீ என்னிடம் நடித்துக் கொண்டிருக்கிறாயா? என்று நான் கேட்டேன். அப்படித்தான் எங்களுக்குள் பிரச்சனை அன்று தொடங்கியது. அதனால் நான் அவர் அவருடைய அப்பாவோடு வீட்டுக்கு போகிறேன் என்று கிளம்பினார். நானும் சரி என்று என்னுடைய காரை எடுக்கப் போக வேண்டும் என்று கூறியிருந்தேன். இதுதான் அந்த நேரத்தில் நடந்தது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சம்யுக்தா தன்னுடைய லைவ் வீடியோவில் தனக்கு பீரியட்ஸ் நேரத்தில் வலி அதிகமாக இருக்கும் என்னால் நிற்கவே முடியாது. அப்படி இருக்கும் போதும் கூட எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் நான் வீட்டிற்கு போவதற்காக துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். நீ எப்போது போவாய் சீக்கிரமாக கிளம்பினால் தான் நான் காரை எடுக்கப் போக முடியும் என்று என்னை வெளியே அனுப்புவதில் அவர் குறியாக இருந்தார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல சம்யுக்தா 24 மணி நேரமும் ரொமான்ஸ் மூடில்தான் விஷ்ணுகாந்த் இருப்பார் என்று சொன்னதற்கு விஷ்ணுகாந்த் அப்படியெல்லாம் யாராலையாவது இருக்க முடியுமா? அப்படி ஒரு மனிதரால் 24 மணி நேரமும் அந்த மாதிரி எண்ணத்தில் இருக்கவே முடியாது. நானும் மனிதன் தான். திருமணம் ஆன பிறகு நாங்கள் பேசுவதற்கு கூட எங்களுக்கு பிரைவேசி கிடைக்கவில்லை. காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும் அவருடைய அப்பா வந்து விடுவார், அதுதான் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னேன் என்றும் கூறியிருக்கிறார்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications