நடிகர் நேத்ரன் திடீர் இறப்பு.. மகள் நடிகை அபிநயா கடைசியாக தந்தை பற்றி சொன்ன உருக வைக்கும் வார்த்தை
சென்னை: சீரியல் நடிகர் யுவராஜ் நேத்ரன் இன்று காலமானார். இந்த தகவல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் இறப்பதற்கு முன்பு அவர் பற்றி அவருடைய மகள் பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று பல சேனல்களில் சீரியல்களில் நடித்த நடிகர் நேத்ரன் சில மாதங்களாகவே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் இன்று காலம் ஆகி இருக்கிறார். அவருக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நேந்திரனின் மனைவி தீபா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நேத்ரன் மற்றும் தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் அபிநயா நேத்திரனுடன் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு அபிநயா பெரிய அளவில் பிரபலமானார். அதுபோல சமீபத்தில் முடிவடைந்த கனா காணும் காலங்கள் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் அபிநயா நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவ் வகை இருக்கிறார். இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தந்தை ஐசியூவில் இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய அப்பாவிற்கு கேன்சர் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டது. அவருக்கு இப்போது ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் அவர் ஐசியூவில் இருக்கிறார்.
சில நாட்களாகவே உடல்நிலை மோசமாக இருக்கிறது. இதை சமூக வலைதளத்தில் பதிவிடுவதா? வேண்டாமா? என்று எனக்கு சந்தேகம் இருந்தது. என்னுடைய சிந்தனையை புறம்தள்ளிவிட்டு இந்த வீடியோவை பதிவிடுகிறேன். என்னுடைய தந்தை குணமாவதற்கு எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள், உங்களுடைய வேண்டுதலுக்காக தான் நான் இதை பதிவிடுகிறேன் என்று உருக்கமாக பேசி இருந்தார்.
இந்த வீடியோ வெளியான பிறகு அதிகமான ரசிகர்கள் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி வந்தனர். ஆனால் ஒரு சிலர் இந்த நேரத்தில் கூட வீடியோ வெளியிடுறாங்களே என்று விமர்சித்தும் வந்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அபிநயா தங்களுக்கு ஆறுதல் கூறியவர்களின் அன்பை தங்கள் புரிந்து கொண்டதாக அந்த நேரத்தில் போஸ்ட் போட்டு இருந்தார்.
இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அப்பா ஐசியூவில் இருக்கிறார் புற்றுநோய் பாதித்து இருக்கிறது என்று நான் போஸ்ட் போட்டதும் சிலர் விமர்சித்தார்கள் அது எனக்கு மன வேதனையை கொடுத்தது. ஆனால் என்னுடைய அப்பா மீண்டு வந்து விட்டார். இப்போது அவர் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்.
எங்களுக்கு முக்கிய துணையாக இருப்பது என்னுடைய அப்பா தான். எந்த பிரச்சனை வந்தாலும் எங்களுக்கு தைரியம் கொடுப்பார். அவருக்கு புற்றுநோய் என்று ரிசல்ட் வந்ததும் நாங்கள் எல்லாம் உடைந்து போய்விட்டோம். ஆனால் அதை அவர் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லாம் மாறும் என்று தைரியம் கொடுத்தார். அப்பா இன்னும் சீக்கிரமாக பழைய நிலைக்கு திரும்பியதும் லைவில் பேசுவார். அதுபோல சமூக வலைத்தளத்தில் சில கமெண்டுகள் நம்மை கஷ்டப்படுத்துற வகையிலே போடுறாங்க என்று வேதனையோடு பேசி இருந்தார்.
இந்த நிலையில் இன்று நேந்திரன் காலமான செய்தியை கேட்டதும் ரசிகர்கள் இந்த குடும்பத்திற்கு இந்த கஷ்ட காலத்தை கடந்து வரும் தன்னம்பிக்கையும், தைரியத்தையும் கடவுள் கொடுக்க வேண்டும் என்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications