15 வயதில் திருமணம்.. 10 வருடத்தில் இறந்த கணவர்.. விழுந்த பழி.. இனி பிக் பாஸில்! சீரியல் நடிகை ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை பானுமதி தன்னுடைய திருமண வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றியும் தன்னுடைய கணவர் இறந்த பிறகு தன்னுடைய குழந்தைகளை தான் வளர்த்து வரும் விதம் குறித்து கண்ணீரோடு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு அந்த பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்தும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளில் ஒரு சிலர் சமூக வலைதளத்திலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை பானுமதி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Television Vijay TV Bigg Boss

இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த பேட்டியில் நடிகை ஷகிலா தான் பானுமதியிடம் கேள்விகள் கேட்டிருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில் பானுமதி பேசுகையில், தான் ஆரம்ப காலகட்டத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் டான்ஸ் ஷோக்குகளும் சென்று நடனமாடினேன். அப்போது எனக்கு 15 வயது தான் இருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடும் போதுதான் என்னுடைய கணவரை நான் பார்த்தேன். அவர் என்னிடம் ப்ரபோஸ் செய்ததால் எனக்கும் அவரை பிடித்து போக அந்த வருடமே எனக்கு திருமணமும் நடைபெற்றது.

15 வயதில் திருமணமான போது எனக்கு வெளி உலகை பற்றி எதுவும் தெரியாது. குடும்பம் என்றால் என்ன? குழந்தை பற்றி எதுவுமே தெரியாதபோது எப்படியோ பத்து வருடத்தின் கணவரோடு குடும்பம் நடத்தி விட்டேன். 10 வருடத்திற்குள் என்னுடைய கணவருக்கு மஞ்சள் காமாலை வந்து அவர் இறந்து போக அதற்கு பிறகு தான் எனக்கு வெளி உலகமே தெரிய ஆரம்பித்தது.

ஆனால் என்னுடைய கணவர் அளவுக்கு அதிகமாக குடித்து மஞ்சள் காமாலையில் தான் அவர் இறந்தார். ஆனால் நான்தான் அவரை கொன்று விட்டேன் என்று அவருடைய வீட்டில் என் மீது பழி போட்டனர். அதனால் அவருடைய உறவினர்களே எனக்கு வேண்டாம் என்று நான் என்னுடைய இரண்டு மகன்களை கூட்டிக்கொண்டு தனியாக வந்து விட்டேன். என்னுடைய மகன்கள் இருவரையும் வெளி உலகத்திற்கு தெரியாமல் தான் நான் வளர்த்து வருகிறேன்.

இரண்டு மகன்களில் ஒருவர் இன்ஜினியரிங் முடித்து விட்டார். என்னுடைய மகன்களை நான்தான் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறேன். பல சீரியல்களில் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஆனாலும் என்னுடைய மகன்களை நான் நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருக்கிறது.

என்னுடைய மகன்களை பெருமைப்பட வைக்க ஒரு மேடைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசிக்கொண்டு இருந்த பானுமதி இடம் ஷகிலா நீங்க பிக் பாஸில் கலந்து கொள்வது வாய்ப்பு கிடைச்சா போவீங்களா? என்று கேட்க, அதற்கு கண்டிப்பாக நான் போவேன் என்று பானுமதி கூறி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பெரிய லிஸ்ட் வைரலாகி வரும் நிலையில் இவரும் அதில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று பார்த்து இருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+