திருமண நாளில் கர்ப்பத்தை அறிவித்த டாப் சீரியல் கதாநாயகி.. கணவர் இந்த பிரபலம் தானா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான நீ தானே பொன்வசந்தம் என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை தர்ஷனா தன்னுடைய திருமண நாளில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அவருடைய கணவரோடு எடுத்த கர்ப்ப கால புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்களுக்கு பேவரைட் கதாநாயகியாக மாறிவிடுகிறார்கள். அதுபோல ஒருவர்தான் தர்ஷனா. இவர் டாக்டராக இருந்தாலும் ஜீ தமிழில் நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியான நீதானே பொன்வசந்தம் என்று சீரியல் மூலமாகத்தான் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

முதல் சீரியல்
முதல் சீரியலிலே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான கனா சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கனா சீரியல் இருந்து விலகிவிட்டார். முதல் சீரியலில் தன்னைவிட வயது அதிகமான கதாநாயகனை காதலித்து திருமணம் செய்வது போன்று இவருடைய கேரக்டர் இருந்தது.
கனா சீரியல்
அதை தொடர்ந்து இரண்டாவது சீரியலான கனாவில் விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள் மற்றும் அவருடைய சாதனைகள் போன்றவற்றை மையப்படுத்தியே கதை நகர்ந்தது. அதில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

காதல் திருமணம்
மருத்துவரான நடிகை தர்ஷனா அவருடைய உறவினரான அபிஷேக் என்பவரை திருமணம் செய்திருந்தார். இருவரும் பல் மருத்துவர்கள். இருவரும் காலேஜ் படிக்கும்போது இருந்தே சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்தின் போது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சீரியலை விட்டு விலகல்
திருமணத்திற்கு பிறகு சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருக்கும் தர்ஷனா இப்போது கர்ப்பமாக இருக்கிறார். நேற்று அவருடைய திருமண நாள் அதே திருமண நாளில் தான் கர்ப்பமாக இருப்பதை போட்டோ சூட் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். தர்ஷனா குடும்பத்தில் யாருமே சினிமா துறையை சார்ந்தவர்கள் கிடையாது. ஆனால் தர்ஷனாவுக்கு கல்லூரி படிக்கும் போது நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாம்.

கர்ப்ப கால போட்டோ சூட்
அதற்காக போட்டோ சூட் மற்றும் மாடலிங் பண்ண தொடங்கியிருக்கிறார். ஆனால் அவருடைய குடும்பத்தினர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு அதற்குப் பிறகு நடிக்கப்போ என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் மருத்துவ படிப்பை படித்து முடித்துவிட்டு பிறகு நடிக்க தொடங்கி இருக்கிறார். முதலில் குடும்பத்தினருக்கு தர்ஷனா நடிப்பது பிடிக்கவில்லை என்றாலும் நீதானே என் பொன்வசந்தம் சீரியல் மூலமாக இவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து குடும்பத்தினரும் சப்போர்ட் செய்ய தொடங்கி இருக்கின்றார்கள். இந்த நிலையில் இப்போது தர்ஷனா மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் இருவரும் கர்ப்ப கால போட்டோ சூட் எடுத்து இருக்கிறார்கள். அதை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications