மாங்காடு காமாட்சி கோயிலில் நடந்த அதிசயம்..! சீரியல் நடிகைகள் கட்டிய கோவில்.. வியக்க வைத்த காரணம்
சென்னை: சீரியல் நடிகை தீபா தன்னோடு சேர்ந்து சில நடிகைகளோடு தொட்டியம் பக்கத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் முருகனுக்கு ஒரு கோயில் கட்டி அதன் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த இருக்கிறாராம். இது பற்றி புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமாக சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர், அன்பே சிவம் உட்பட பல சீரியல்களில் நடிகை தீபா நடித்து அதற்குப் பிறகு இப்போது சீரியல்களில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் தீபா ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு இவர் இரண்டாவது திருமணம் செய்தது, அதற்கு பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை குறித்து இவர் பல பேட்டிகளிலும் பேசி இருந்தார்.

அதோடு தன்னுடைய மகனோடு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தீபா அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இதனால் இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் இவர் பரிச்சயமானவர்தான். இந்த நிலையில் இவர் செப்டம்பர் ஐந்தாம் தேதி திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏலூர்பட்டி என்கிற கிராமத்தில் புதியதாக தான் கட்டிய காசி விசுவநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதோடு தான் தன்னுடைய சீரியல் நண்பர்களோடு சேர்ந்து கட்டிய கோவிலின் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நிதி திரட்டி மடிப்பிச்சை எடுத்த வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபா பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் எப்படி இப்படி ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தீவிரமான முருக பக்தை.
முருகனை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலே அவருடைய அறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று ஒரு நாள் அங்கு தங்கி விட்டு வந்தால் என்னுடைய கவலை கஷ்டங்கள் எல்லாம் எனக்கு குறைந்துவிடும். இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன். இந்த மாதிரி தான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் நான் மாங்காடு காமாட்சி கோவிலுக்கு போயிருந்தேன்.

அங்கு சுப்பிரமணி என்கிற ஒரு சாமியாரை சந்தித்தேன். அவர்தான் தொட்டியம் பக்கத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயில் கட்டப்பட்டு வருகிறது பற்றி என்னிடம் சொன்னார். அந்த கோயிலில் முருகன் விநாயகர் என்று தனித்தனி சன்னதிகள் அமைய இருக்குது என்று சொன்னார். அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து எனக்கு கனவில் ஒரு குரல் கேட்டது. அதில் முருகனுக்கு கோவில் எழுப்ப நீ அங்க போ என்று சொல்லுச்சு. எனக்கு அது முருகனே என் கனவில் வந்து சொன்னது மாதிரி இருந்துச்சு.
அதனால அடுத்த நாளே நான் அந்த கோயிலுக்கு போனேன்.அங்கு போன பிறகு கோவில் கட்டுவதற்காக முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தனிநபராக என்னால் முழுமையாக கோவில் கட்ட முடியாது என்பதால் எனக்கு தெரிந்தவர்கள் ஊர் மக்கள், சாமியார் என எல்லாரிடமும் பேசி வேலைகளை தொடங்கினேன்.

என்னுடைய நண்பர் வட்டாரத்தில் நடிகைகள் மெட்டிஒலி வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, நடிகர் அழகப்பன் ஆகியோர் இந்த கோயில் எழுப்புவதற்கு முக்கிய பங்கு வகித்தார்கள். அவர்கள் பலருடைய உதவியால் கோவில் கட்டு வேலை முடிந்திருக்கிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications