சுந்தரி சீரியல் கேபிக்கு யார் மீது கோபம்? கெட்ட வார்த்தையோடு கொடுத்த கேப்ஷன்.. இப்படி சொல்லிட்டாங்க
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லா செல்லஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் மார்டன் உடையில் இருக்கும் கேபி தன்னை விமர்சிப்பவர்களை தாக்கும் வகையில் கேப்ஷன் ஒன்று கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் அதிகமாக அடுத்த மாநில நடிகைகள் தான் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இயக்குனர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோருமே அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலர்தான் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பல நடிகைகள் பல்வேறு திறமைகளோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில நடிகைகள் தங்களுடைய நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் கவிதை படிப்போமா? என்று கதை, கவிதை படித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அந்த நிலையில் தான் அவருக்கு சன் டிவியில் தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் ஆரம்பத்திலேயே இவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு மக்களுக்கு தொடங்கிவிட்டது.
ஆனாலும் இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் சினிமா மற்றும் சீரியலின் வாய்ப்புக்காக அதிகமாக முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் கேப்ரில்லாவிற்கு சுந்தரி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டு மற்றும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

சிவப்பாக அழகாக இருந்தால்தான் வாய்ப்பு என்று இல்லை என்று கருப்பு நிறமும் அழகுதான் என்று இவருடைய நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சுந்தரி சீரியலில் படிக்காத பெண்ணாக இருந்த கேபி தன்னுடைய சொந்த உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் படித்து கலெக்டர் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் கடந்த மாதத்தில் தன்னை போல சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுப்பதற்காக "சினிமா பேட்டரி தியேட்டர்" ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதற்கு அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. பலரும் கேப்ரில்லாவை பாராட்டி வருகிறார்கள்.

அதோடு கேப்ரில்லா சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு "அனைத்து வன்மங்களையும், அனைத்து பேச்சுக்களையும், அனைத்து மயிரையும்.. தாங்கும் பக்குவம் நமது வாழ்க்கையின் அருமை தெரியும் போது புரியும்" என்று குறிப்பிட்டு இருக்கும் நிலையில் இதை சிலர் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் யார் மீது இவ்வளவு கோபம் எதற்காக இப்படி ஒரு பதிவு என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications