11 வருஷம் கழித்து பிறந்த குழந்தை.. ஆனால் இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! சீரியல் நடிகை காயத்ரி உருக்கம்
சென்னை: சீரியல் நடிகையான காயத்ரி யுவராஜ்க்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் 11 வருடம் கழித்து இப்போது பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த நிலையில் குழந்தை பிறந்த யோகத்தில் புது வீடும் கட்டி இருக்கும் காயத்ரி யுவராஜ் திடீரென்று மக்களிடம் ஒரு உருக்கமான வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் பலருக்கும் பரிச்சயமானவர்தான். இவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் 11 வருடம் கழித்து இரண்டாவது பெண் குழந்தை கர்ப்பமாக இருந்த நிலையில் சீரியலில் இருந்து விலகி இப்போது குழந்தைகளை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

காயத்ரிக்கு மகள் பிறந்து 4 மாதத்தில் புதிய வீட்டில் காலடி எடுத்து வைத்துள்ள காயத்திரி தன்னுடைய குழந்தைகளோடு எடுத்த புகைப்படங்களையும் தன்னுடைய புது வீட்டின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அதே நேரத்தில் சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்று ஆசையோடு இருந்த காயத்ரி யுவராஜ் அதற்காக முறையாக நடனமும் கற்றுக்கொண்டு பிறகு தன்னுடைய கணவர் யுவராஜோடு நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக முத்தழகு கேரக்டரில் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
அதை தொடர்ந்து அரண்மனைக்கிளி என்ற சீரியலிலும் நடித்து வந்தார். அடுத்ததாக ஜீ தமிழில் சீரியல்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய குழந்தைகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் 11 ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார். அதில் காயத்திரி பேசுகையில், என்னுடைய மகன் பிறந்த பிறகு நாங்கள் இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்வது பற்றி யோசிக்கவே இல்லை.
ஏனென்றால் எங்களுடைய முழு அன்பும் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் நாங்கள் யோசித்து அந்த முடிவை எடுத்திருந்தோம். ஆனால் அவன் வளர்ந்த பிறகு அடிக்கடி எனக்கு ஒரு தங்கையோ அல்லது தம்பியோ இல்லையே என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அவனுடைய ஏக்கம் எங்களுக்கு புரிய ஆரம்பித்தது. அதனால் இன்னொரு குழந்தை பிறந்தால் அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று நாங்கள் யோசித்துக் கொண்டே இருந்தோம்.
ஆனால் அவன் என்னுடைய மகளை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்கிறார். அவன் தான் இப்போது என் மகளுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் இருக்கிறான். அதனால் நாங்கள் அனைவரிடமும் சொல்லிக் கொள்வது ஒரே விஷயம் தான்... தயவு செய்து யாரும் ஒரு குழந்தையோடு நிப்பாட்டி விடாதீர்கள். உங்கள் குழந்தைக்கு இன்னொரு ஆதரவு நிச்சயம் தேவை என்று அந்த பேட்டியில் காயத்ரி பேசியிருக்கிறார். அதோடு காயத்ரியின் பிறந்த நாளில் தான் அவருடைய மகளும் பிறந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications