10வருட ஏக்கம்.. 42 வயதில் கர்ப்பமாக இருந்த நடிகை ஜூலிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு
சென்னை: சீரியல் நடிகை ஜூலிக்கு இன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அது குறித்த மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். ஜூலிக்கு ஏற்கனவே இரண்டு முறை கரு கலைந்து இருந்த நிலையில் 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார். அவருக்கு இப்போது 41 வயதாகும் நிலையில் குழந்தை நல்லபடியாக பிறந்திருப்பதாக ஜூலி தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கும் அவருடைய குழந்தைக்கும் ஆசிர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களை கொடுத்து வருகிறார்கள்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ஜூலியின் நிஜப் பெயர் விசாலாட்சி தான். ஆனால் எல்லோருக்கும் அவரை ஜூலி என்றால் தான் தெரியும். ஆரம்பத்தில் இவர் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் டான்ஸர் ஆகவும் இருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

அதற்கு பிறகு தான் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பல சீரியகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஜூலி சில வருடங்களாக காணாமல் போயிருந்தார். பிறகு சத்யா சீரியல் மற்றும் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து இருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவரோடு கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது தங்களுடைய திருமணத்திற்கு பிறகு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் தாங்கள் பட்ட கஷ்டம் குறித்து பேசி இருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு இரண்டு முறை கர்ப்பமாகியும் அந்த கர்ப்பம் தனக்கு நிலைக்கவில்லை என்று கண்ணீரோடு ஜூலி பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுவதில், நானும் என்னுடைய கணவரும் லேட் ஆகத்தான் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்திற்கு பிறகு எங்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அதனாலையே வாய்ப்பு தேடி இரண்டு வருடங்களாக நாங்கள் அழைந்து கொண்டிருந்தோம். அப்போது குழந்தையை பற்றி நாங்கள் எதுவும் யோசிக்கவில்லை. ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்தே பார்க்கிறவர்கள் எல்லோரும் குழந்தையை பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் நாங்கள் அப்போது பெரியதாக நினைக்காமல் வேலையை தேடி ஓடிக் கொண்டிருந்தோம். அப்போது முதல் முறை கர்ப்பமானோம். அது 45 நாளில் அபார்ஷன் ஆகிவிட்டது. எனக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்தது. எனக்கு தைராய்டு பிரச்சனை இருந்ததால் பீரியட்ஸ் சரியாக வராமல் இருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 5 மாதங்களுக்கு ஒரு முறை என்றுதான் பீரியட்ஸ் வந்து கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் பிறகு குழந்தை என்ற ஆசை வந்த பிறகு நாங்கள் அதற்காக சிகிச்சைகளை எடுத்தோம். அப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமானேன். ஆனால் ஸ்கேன் பார்க்கும்போது குழந்தை கர்ப்பபைக்குள் இல்லை டியூப்பில் இருக்கிறது என்று சொல்லி குழந்தையை அபார்ஷன் செய்ய சொல்லி விட்டார்கள்.
ஹாஸ்பிடலுக்கு செக்கப் போன இடத்தில் என்னுடைய டீடெயில்ஸ் எல்லாம் வீட்டில் இருப்பதை எடுத்துட்டு வர சொல்லி இருந்தார்கள். என்னுடைய கணவர் வீட்டிற்கு போய் குழந்தையை நினைத்து ரொம்பவே கதறி அழுது இருக்கிறார். அடுத்த நாள் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னிடம் சொன்னார்கள். இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது. பிறகு அபார்ஷன் பண்ணின குழந்தையை என்னுடைய கணவரின் கையில் கொடுத்த போது அவர் கதறி துடித்து விட்டார் என்று ஜூலி எமோஷனலாக பேசியிருக்கிறார்.

அதனாலேயே இப்போது நாங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஆரம்பத்தில் வெளியே சொல்லவில்லை. பூச்சூடல் எல்லாம் முடிந்த பிறகு தான் இந்த விஷயத்தை வெளியே சொன்னோம். ஆனால் இப்போது எல்லோரும் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு சிலர் அறிவுரைகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜூலி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications