யாரை செருப்பால அடிக்கணும்? சீரியல் நடிகை லட்சுமி நறுக்குன்னு கேட்ட கேள்வி.. எஸ்வி சேகருக்கு பதிலடி
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே கடும் விவாதங்கள் நிலவி வரும் நிலையில், நடிகரும் அரசியல் கருத்தாளருமான எஸ்.வி. சேகர் வெளியிட்ட சமீபத்திய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சீரியல் நடிகை லட்சுமி கடும் கோபத்துடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்ச்சைக்கு காரணமான பேச்சு
எஸ்.வி. சேகர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "புதருக்கு லைட்டு போட முடியுமா? தெருவிற்கு தான் லைட்டு போடுவாங்க... அப்போ அந்த பொண்ணு எதுக்கு புதருக்கு பின்னாடி போனாங்க?" என்று பேசியது பலரின் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி - தூத்துக்குடி சம்பவம்
சமீபத்தில் தூத்துக்குடி பகுதியில், இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு வந்த இந்த கருத்து தான் இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
சீரியல் நடிகை லட்சுமியின் பதிலடி
எஸ் வி சேகர் பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் சீரியல் நடிகை லட்சுமி தனது வீடியோவில் கூறியதாவது: "நான் பேசப்போறது அரசியல் சம்பந்தமா இல்ல... மனிதாபிமானத்துக்காக தான் பேசுறேன். இன்னைக்கு தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம இந்திய அளவிலேயே ஒவ்வொரு நொடியும் கற்பழிப்பு கலாச்சாரம் பெருகிக்கிட்டே போகுது. அதை உடனே நிறுத்த முடியாது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா தண்டனைகள் கடுமையா இருந்தா தான் நம்மை பாதுகாக் முடியும் என்பதுதான் எல்லாரோட கருத்து.
இன்னிக்கு நாம பார்க்குற 10 வீடியோல எட்டு வீடியோ இந்த கற்பழிப்பு பற்றிதான் வந்துக்கிட்டே இருக்கு. அப்போ அத்தனை பேரோட மனநிலையும் எப்படி இருக்கும்? பொறுப்பில் இருக்குறவர்கள் குற்றங்களையோ குற்றவாளிகளையோ பற்றி பேசலன்னாலும் பரவாயில்லை... ஆனா உங்க நியாயப்படுத்திக் கொள்ளும் என்பதற்காக குற்றவாளிகளுக்கு ஆதரவா இருக்குற மாதிரி, அந்த குற்றங்களை நியாயப்படுத்துற மாதிரி பேசுறது ரொம்ப ரொம்ப தவறானது.
இன்னைக்கும் இந்த நாட்டில் பல இடங்களில் மக்கள் அடிப்படை கழிவறை வசதி இல்லாம தான் வாழ்ந்துட்டு இருக்கு. சம்பந்தப்பட்ட அந்த குழந்தை இயற்கை உபாதையை கழிக்கத்தான் அந்த புதருக்கு பின்னாடி போயிருக்கு. ஆனா அந்த பொண்ணு நம்ம பின்னாடி ஒரு நாயோ, புலியோ, கரடியோ வரும்னு தான் பயப்படுவாளே தவிர மனித மிருகங்கள் வந்து நம்மை வேட்டையாடும் என்று நினைச்சு தற்காப்பு கலை கற்றுக்கிட்டு போக முடியாது.
இந்த அடிப்படையான விஷயங்களே உங்களுக்கு தெரியாம நீங்க பேசிட்டு இருக்கீங்க. புதருக்கு லைட் போட முடியாது... தெருவுக்கு தான் போட முடியும்'ன்னு நக்கலா பேசுறீங்க. இங்க தெருவுக்கெல்லாம் நீங்க லைட் போட்டுட்டீங்களா? இங்க எல்லாம் வெளிச்சமாக இருக்கா? இங்க கேள்விகளுக்கு பதில் தான் பதிலா இருக்கணும்... கேள்விக்கே கேள்வி பதிலா இருக்க முடியாது." என்று ஆதங்கத்துடன் லட்சுமி பேசியிருக்கிறார்.
வைரல் ஆன வீடியோ
இந்த வீடியோவை "யாரை செருப்பால் அடிக்கலாம்?" என்ற கேப்ஷனுடன் வெளியிட்ட லட்சுமி, சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஒரு சம்பவத்தின் வலியை புரிந்து கொள்ளாமல் பேசப்படும் வார்த்தைகள் சமூகத்தில் எவ்வளவு பெரிய எதிரொலியை ஏற்படுத்தும் என்பதை இந்த சர்ச்சை மீண்டும் நிரூபித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications