மார்பகங்கள் குறித்த கேள்வி..அந்த செயலுக்காக சாபம் விடுறாங்க.. சீரியல் நடிகை நீலிமா ராணி வேதனை
சென்னை: சீரியல் நடிகை நீலிமா ராணி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மார்பகங்கள் குறித்து பலர் கேவலமாக கருத்து வெளியிட்டு வருவதாக வேதனையோடு தெரிவித்து இருக்கிறார்.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடிய தன்னிடம் பலர் தவறான வார்த்தைகளால் கமெண்ட்களில் கேள்வி எழுப்புகிறார்கள் என்று நீலிமா ராணி பல தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.

நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக தேவர்மகன் படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் யாருடா இந்த குட்டி குழந்தை என்று கேட்கும் அளவிற்கு குழந்தைத்தனமாக நடித்திருந்தார். அதன்பிறகு பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார் .
நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல என்னும் திரைப்படத்தில் கூட அவரின் பிரண்டாக நடித்திருப்பார். அப்படி சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு சின்னத்திரையில் வரவேற்பு அமோகமாக இருந்தது .அதனால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் தனது பெயரை நிலைநாட்ட முடிவு செய்திருந்தார்.
எப்போதும் பிசியாக இருக்கும் இவர் டைரக்ட் பண்ணும் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறாராம். அதனால்தான் அந்த வேலையும் செய்து கொண்டிருக்கிறார். அது போதாது என்று அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறார். தற்போது இவர் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சீரியல்களில் நடிப்பதை விட்டு விலகி இருக்கிறார். அதனால் கிடைக்கும் நேரங்களில் தாராளமாக போட்டோ ஷூட்டில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
அந்த மாதிரிதான் இவர் இப்போது எடுத்திருக்கும் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் பலர் நடத்திக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சிலர் தான் ரொம்ப பேமஸ் ஆகி விடுகிறார்கள்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் பற்றி பேசியிருந்தார்.

அதில் 2008 ஆம் ஆண்டுகளில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரைக்கான எல்லா வேலைகளும் என்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் நடந்தது. வெளியே செல்லும்போது என்னை பார்க்கும் அத்தனை நபர்களும் என்னோடு அருகில் வந்து பேச வேண்டும் நினைப்பார்கள், பேசுவார்கள், பாராட்டுவார்கள் ஆனால் சில நேரத்தில் சிலர் என்னை திட்டியும் இருக்கிறார்கள்.
பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதால் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று சிலர் இப்பவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் ஒரு நாள் ஒரு பாட்டி விமான நிலையத்தில் வைத்து என்னை அந்த திட்டு திட்டினார். நாசமாய் போய்விடுவாய் என்று என்னை சபித்தார்.
என்னை தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. அவர்கள் எல்லாம் மனநல மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள் தான். எனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நான் இப்படி எடை போட்டு விட்டேன் அதை சுற்றி நிறைய காரணங்கள் இருக்கிறது.
ஆனால் சிலர் கமெண்ட்களில் என்னுடைய மார்பகங்கள் பற்றி எல்லாம் கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு உடனே நான் எனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்று தோன்றும், பிறகு அப்படி சொல்லி என்ன ஆகப்போகிறது என்று நான் அதை கடந்து விடுவேன் என்று வேதனையோடு தெரிவித்து இருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications