பீரியட்ஸ்ன்னு கூட பாக்காம.. அந்த நேரத்தில் நடந்தது இது தான்.. சம்யுக்தா கொடுத்த விளக்கம்
சென்னை: சின்னத்திரை நடிகை சம்யுக்தா விஷ்ணுகாந்தை பிரிவதற்கான காரணத்தை இன்ஸ்டாகிராம் லைவில் தெரிவித்திருக்கிறார்.
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் பிரிவதற்கான காரணம் பற்றி விஷ்ணுகாந்த் விளக்கம் ஒன்றை கொடுத்திருந்த நிலையில் அதுவெல்லாம் பொய் என்று சம்யுக்தா கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இருவரும் தங்களுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் டெலிட் செய்திருக்கின்றனர்.
இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போன்று இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கேப்ஷன் கொடுத்தும் பதிவு வெளியீட்டும் வந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக விஷ்ணுகாந்த் தனக்கும் தன்னுடைய மனைவி சம்யுக்தாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது எதனால் என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதில் எங்கள் இருவருக்கும் பிரச்சனைக்கு காரணம் சம்யுக்தாவின் தந்தை தான் என்று கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் இன்னும் பல செய்திகளையும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த கருத்துக்களை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்த சம்யுக்தா அதற்கெல்லாம் ரசிகர்களின் முன்பு instagramல் லைவில் வந்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் எங்கள் இருவருக்கும் திருமணத்திற்கு முன்பே பிரச்சனை ஏற்பட்டது. திருமண இன்விடேஷன் அடிப்பதில் தொடங்கி, திருமண புடவை எடுப்பது வரைக்கும் பல பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டது.

என்னுடைய விருப்பப்படி திருமணத்தில் எதுவுமே நடக்கவில்லை. நான் எல்லாமே விஷ்ணுகாந்துக்காக பொறுத்துக் கொண்டேன். திருமண செலவுகளை விஷ்ணுகாந்த் தான் செய்து வந்தார். அதனால் அவருக்கு பிடித்த மாதிரி திருமண இன்விடேஷன் அடித்திருந்தார்கள். அது பழைய மாடலாக இருக்கிறது என்று நான் என்னோடு வேலை பார்க்கும் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக மட்டும் வேற இன்விடேஷன் அடித்திருந்தேன். அதனால் பிரச்சனை வந்தது அதனால் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய போன் காலை விஷ்ணுகாந்த் எடுக்காமல் தவிர்த்து விட்டார்.
இரண்டு நாட்கள் நான் முழுக்க அடித்து பார்த்தேன் எடுக்கவில்லை. பிறகு வீட்டிலும் தேடிப் பார்த்தேன். விஷ்ணுகாந்த் வீட்டிலும் இல்லாததால் நான் அப்போதே கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தேன். பிறகு சமாதானமாகி தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் எங்களுக்கு ஒரு மாதம் ஒன்றாக தான் வாழ்ந்தோம். அப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும் போது எதற்கெடுத்தாலும் வீட்டை விட்டு போய்விடு உங்க அம்மாவை வரச்சொல்லு உங்க அப்பாவை வர சொல்லு என்று அம்மா அப்பாவை வர வச்சு என்னை அனுப்பி வைக்கிறது விஷ்ணுகாந்த் தான்.
கடைசியாக வரும்போது எனக்கு பீரியட்ஸில் இருந்தேன். எனக்கு பீரியட்ஸ் டைமில் அதிகமான வலி இருக்கும். அது சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியும். நான் அந்த அளவிற்கு வலியால் துடித்திருக்கிறேன். அந்த நிலையிலும் என்னை வீட்டை விட்டு எங்க அப்பாவோட போக சொல்லிட்டார் .நான் கார் சர்வீஸ் கொடுத்திருக்கிறேன் நீ வீட்டை விட்டு போனால் தான் நான் வாங்க முடியும் என்று அப்போது கூறினார். நான் அந்த வேதனையில் தான் வீட்டை விட்டு கிளம்பினேன்.
அது கூட லைவில் நாலு பேர் வைத்து வேவு பார்த்துக் கொண்டு இருக்கிறார். நான் என்ன பேசுகிறேன் என்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு பதில் சொல்லவில்லை. அவர் மீது தப்பில்லை என்றால் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது தானே என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications