46 வயதில் நிறை மாத நிலவாக நடிகை சங்கீதா.. பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த ரெடின் கிங்ஸ்லி
சென்னை: சீரியல் நடிகை சங்கீதா கடந்த வருடத்தில் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் 46 வயதான சங்கீதா இப்போது கர்ப்பமாக இருக்கிறார் என்று அவருக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள்.
நடிகை சங்கீதா சின்னத்திரை, வெள்ளி திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அதோடு வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகர் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல திறமை இருக்கு
ரெடின் கிங்ஸ்லியை நடிகராக பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு தொழிலதிபர், டான்ஸர் என்று ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆரம்பத்தில் இருந்தாலும் அதற்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 40 வயதுக்கு மேலே தான் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முதல் திரைப்படம்
இவருக்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் இயக்கிய திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தது. முதல் படம் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படம் தான். அந்த திரைப்படத்திலேயே இவருடைய வித்தியாசமான மேனரிஸம் பலரையும் கவர்ந்தது. கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்திலும் கிங்ஸ்லி நடித்திருந்தார்.

காமெடி நடிப்பு
முதல் திரைப்படத்திற்கும் இரண்டாவது திரைப்படத்திற்கும் அதிகமான மாற்றங்களை தன்னுடைய நடிப்பில் காட்டி இருந்தார். அதேபோல இவருடைய வித்யாசமான பேச்சு வழக்கு மற்றும் காமெடி பல ரசிகர்களையும் கவர்ந்தது. டாக்டர் படத்தில் யோகி பாபுவை கிங்ஸ்லி ஓவர் டேக் செய்திருந்தார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது.
முரட்டு சிங்கிள்
அதற்கு பிறகு அண்ணாத்த, ஜெயிலர் போன்ற படங்களில் ரெடின் கின்ஸிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது முரட்டு சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த கிங்ஸ்லிக்கு இனி திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று அவருடைய நண்பர்களே பேட்டிகளில் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் சீரியல் நடிகை சங்கீதாவிற்கு கிங்ஸ்லியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

திடீர் திருமணம்
முதல்ல நட்பாக தொடங்கிய இவர்களுடைய பழக்கம் பிறகு காதலாக மாறியிருந்தது. இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் ஹைதராபாத்தில் உள்ள கோவிலில் எளிமையாக நடைபெற்றது. திடீரென்று இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் சங்கீதா பகிர்ந்து இருந்தார். அப்போது இது சூட்டிங் புகைப்படமாக இருக்கும் என்று பலர் நினைத்திருந்தனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சங்கீதா உறுதிப்படுத்த இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

வளைகாப்பு பங்க்ஷன்
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சங்கீதா ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். பிறகு அடிக்கடி போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆறாவது மாத வளைகாப்பு எளிமையாக நடத்தி இருந்தார்கள். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் முக்கிய கேரக்டரில் சங்கீதா நடித்துக் கொண்டிருந்தார். அவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி சங்கீதாவிற்கு வாழ்த்து
இந்த நிலையில் நேற்று இவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. இந்த வளைகாப்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதிலும் கிங்ஸ்லியின் நண்பரான தங்கத்துரை, லொள்ளு சபா பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அதுபோல சன் டிவி சீரியல் நடிகர்களும் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு இருந்தார். இது குறித்த புகைப்படங்களை சங்கீதா தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications