Divorce photo shoot: நடிகை ஷாலினி விவாகரத்து விடுதலை..கொண்டாட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும்
சென்னை: நடிகை ஷாலினியின் விவாகரத்து போட்டோ சூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. கல்யாண வாழ்வு கொடுத்த இன்னல்கள் எவ்வளவு இருக்கும்! இதே தான் இந்த photoshoot கொண்டாட்டமும் என்று தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன். அதே போல அந்த விவாகரத்து போட்டோஷூட் உண்மையெனில் அது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார் நாச்சியால் சுகந்தி.
டிவி சீரியல் நடிகையான ஷாலினி தான் விவாகரத்து பெற்றதை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். திருமண போட்டோவை கிழித்து, செருப்பு காலில் போட்டு மிதித்து அதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகிறது. அதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனது முகநூல் பக்கத்தில், Divorce ஆனதைக் கொண்டாடும் photoshoot ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.! எல்லாவற்றையும் கொண்டாட்டத்துடன் கடக்க வேண்டியது தான் வாழ்வு! கொண்டாட்டத்திற்கு பின் உள்ள மனநிலையை கவனிக்க வேண்டியது முக்கியம்.!
சில நாட்களுக்கு முன் புருஷன் இறந்ததுக்கு அப்புறம் ஜாலியா தான் இருக்கேன் என சிரிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது.! இரண்டிற்கும் பின்னால் உள்ள முக்கியமான விஷயம் விடுதலை.! அது freedom from toxic ஆக இருக்கலாம்!
Just because கல்யாணம் ஆனதால மட்டும் நான் இனி ஒருவனுக்கு ஊழியம் பண்ணிகிட்டே இருக்க வேணாங்குற மனநிலை அது! அப்போ கல்யாண வாழ்வு கொடுத்த இன்னல்கள் எவ்வளவு இருக்கும்! இதே தான் இந்த photoshoot கொண்டாட்டமும்!

காலம் முழுக்க பெண்களை கேலி செய்து மட்டம் தட்டிப் பேசிக் கொண்டே கூட பெண்ணில்லாமல் ஆண்கள் வாழ்வதில்லை! ஆனா பெண்களுக்கு அது ஒரு விஷயமே இல்ல! எடுத்தோம் கவுத்தோம்னு கல்யாண வாழ்க்கைய கலைச்சிருக்க மாட்டாங்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் தான் பிரிகிறார்கள்! பொதுவாக காதல் பிரிவே ஒரு வித விடுதலை தான்! எதைச் செய்யும் முன் நம்மை மட்டும் முன்னிருத்தி யோசித்தால் போதும் என இருக்கும் மனநிலை! இருபாலருக்கும் பொருந்தும்!
அத்தனை மெனக்கெடல்களும் அத்துணூண்டு அன்புக்குத் தான்! அத கொடுக்குறதுல அவ்ளோ demand வச்சா இப்படித்தான் விடுதலைய கொண்டாடுவாங்க! அவரும் கொண்டாடியிருக்கலாம் ! ஆனா ஒடுக்கப்படுறவன் கொண்டாட்டம் தான் ஊர் பேசும் கொண்டாட்டம்! #விடுதலை விவாகரத்து என்று பதிவிட்டுள்ளார்.
முகநூல் பதிவரும் சமூக ஆர்வலருமான நாச்சியாள் சுகந்தி தனது முகநூல் பக்கத்தில், எல்லா உணர்வுகளையும் ஏன் காட்சிப்படுத்த வேண்டும்? சில விஷ்யங்கள் மிக மிக அந்தரங்கமானவை அல்லவா? காதலை, அம்மா பிள்ளை உறவை, கணவன் மனைவி அன்யோனியத்தை, நெருக்கத்தை காட்சிப்படுத்துவதால் என்ன நன்மை? அந்த உறவு தனிப்பட்ட இருவருக்குமான ஸ்பெசல் உணர்வு அல்லவா. அதைக் காட்சிப்படுத்துவதால் அதன் இயல்பும் தனித்துவமும் ஒருபடியேனும் குறையுமல்லவா?
அந்த விவாகரத்து போட்டோஷூட் உண்மையெனில் அது மிகவும் கவலைக்குரிய விஷயம். திருமண போட்டோஷூட்டுகள் சில எரிச்சலையூட்டினாலும் அவை பார்ப்பவர்கள் மனதில் மகிழ்ச்சியை விதைக்கிறது. திருமணம் செய்துகொண்டால் இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தவேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற ஒரு நேர்மறையான கற்பனையை விதைக்கிறது.
ஆனால் விவாகரத்து அப்படியா? எத்துனை மோசமான, அராஜக துணை என்றாலும் ஒரு திருமணம் உடையும்போது சம்பந்தப்பட்ட இருவருக்கும் அது வலியைத் தரும். காலம் முழுக்க அந்த வலி இருக்கும். வலியின் வீரியம் வேண்டுமானால் குறையலாம், காலத்தின் ஓட்டத்தில்.நார்மலைஸ் டைவோர்ஸ் என்று இந்தியா மாதிரியான பிற்போக்கு - சாதிய சமூகத்தில் பேசுவது நல்லதல்ல. இன்னமும் டைவர்ஸ் ஆன பெண்ணை இயல்பாக நடத்தும் சமூகமாக இந்தியா மாறவில்லை. தனிப்பெண்களுக்கு நம் சமூகம் இன்னமும் மரியாதை கொடுக்க கற்றுக்கொடுக்கவில்லை. இன்னமும் அதற்கு நாம் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது.
அது ஒருபுறம் இருக்க விவாகரத்து போட்டோஷூட்டுகள் திருமணத்துக்கு காத்து நிற்கும் ஆணுக்கும் பெண்ணும் குடும்பத்துக்கும் என்ன மாதிரியான மனநிலையை உருவாக்கும்? திருமணம் என்றால் அது இறுதியில் இங்குதான் போய் நிற்குமோ என்கிற பதற்றத்தை அது உருவாக்காதா? உலகம் முழுக்க திருமணத்துக்கு மாற்றாக இன்னொரு அமைப்பு முறை உருவாக்கப்படவில்லை.

லிவ் இன் ரிலேசன்ஷிப் சிக்கலைத்தான் உண்டாக்குகிறது என்பதுதான் உலகம் சொல்கிற உண்மை. நம் ஊரில்,' அவனை அவள் சேர்த்துக்கிட்டாளாம்' டைப் வாழ்வு முறையின் இன்னொரு பரிணாமம் தான் 'லிவ் இன் ரிலேசன்ஷிப்'.
திருமணத்துக்கு மாற்றாக இன்னொரு முறையை கண்டறிந்தபின் 'நார்மலைஸ் டைவோர்ஸ்' முழக்கங்கள் எழுந்தால் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நல்லது.
விவாகரத்து எல்லாருக்கும் நிம்மதியை தருகிற விஷயமல்ல. அது மிகவும் அந்தரங்கமான உணர்வு. விடுதலை என கொண்டாடுகிறவர்கள் தன்னளவில் கொண்டாடுதல் சமூகத்துக்கு நலம் பயக்கும் என்று கூறியுள்ளார் நாச்சியாள் சுகந்தி.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications