8 ஆண்டுகள் கழித்து "சரவணன்- மீனாட்சி" நடிகை ஸ்ரீஜா கர்ப்பம்.. வளைகாப்பு படங்களை பகிர்ந்த செந்தில்
சென்னை: சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீஜாவுக்கு வளைகாப்பு நடந்த புகைப்படங்களை அவரது கணவரும் நடிகருமான செந்தில் பகிர்ந்துள்ளார். 8 ஆண்டுகள் கழித்து ஸ்ரீஜா கருத்தரித்துள்ளதால் தம்பதியர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர்கள் செந்திலும் ஸ்ரீஜாவும். இவர் உண்மையில் காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தொடருக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியலில் நடித்தனர். மேலும் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற வெப் சீரிஸிலும் அவர்கள் இருவருமே நடித்து வந்தனர். இந்த சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

3 சீசன்கள்
இந்த வெப்சீரிஸ் 3 சீசன்கள் ஓடியது. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன பிறகும் தற்போது ஸ்ரீஜா கர்ப்பம் ஆகியுள்ளார். அவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோக்களை செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் மகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீஜா
அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த இன்ஸ்டா பதிவில் நிறைமாத கர்ப்பிணியாக ஸ்ரீஜா நிற்கிறார். அவரது வயிற்றில் கை வைத்தபடி செந்தில் நிற்கிறார்கள். "நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

படங்களில் நடித்த செந்தில்
செந்திலுக்கு சீரியலுக்கு பிறகு சினிமா வாய்ப்புகளும் வந்தன. தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீஜா கேரளாவை சேர்ந்தவர். இவர் 30- க்கும் மேற்பட்ட சீரியல்களையும் வெப் சீரிஸ்களையும் நடித்துள்ளார். இவர்களுக்கு சரவணன் மீனாட்சிதான் திருப்பு முனையை அளித்தது.

கைகளில் குழந்தை
இவர்கள் நிஜ வாழ்வில் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். 2014 இல் திருமணம் ஆனாலும் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்த நிலையில் தற்போது இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களின் கைகளில் குழந்தை தவழ போகிறது.












Click it and Unblock the Notifications