ஒரு பொண்ணு 2வது திருமணம் செய்யக்கூடாதா? வெளியே பல விஷயம் தெரியாது.. ஸ்ரீதிகா எமோஷனல்
சென்னை: சீரியல் நடிகை ஸ்ரீதிகா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய திருமணம் பற்றி இணையத்தில் பலரும் தவறாக கருத்து தெரிவித்து வருவது குறித்து தன்னுடைய வருத்தத்தை ஸ்ரீதிகா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு பொண்ணு இரண்டாவது திருமணம் செய்வது தப்பா? எதற்காக இப்படி எல்லாம் அடுத்தவர்களின் மனம் புண்படும்படி சிலர் பேசுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பொதுவாக ஒரு சிலருடைய மனநிலையில் அடுத்தவர்கள் நம்மை விட நன்றாக இருந்தாலும் அதைப்பற்றி விமர்சிப்பார்கள், அதே நேரத்தில் அடுத்தவர்கள் கஷ்டப்பட்டாலும் அதைப்பற்றியும் விமர்சிப்பார்கள். எல்லோருடைய வீட்டிலும் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு அடுத்தவர்கள் வீட்டில் என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வதிலேயே பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதிலும் இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அடுத்தவர்கள் பற்றி தெரிந்தும் தெரியாமலுமே பலர் தப்பு தப்பாக பேசி வருவதை பார்க்க முடிகிறது. அது போல தான் சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ரீதிகா இரண்டாவது திருமணம் செய்தது கூட இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஸ்ரீதிகா நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார். அதற்குப் பிறகு குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடித்த வேங்கை திரைப்படத்தில் கூட தனுஷின் தங்கை கேரக்டரில் நடித்திருப்பார். அதுபோல வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு குடும்ப நண்பர் ஒருவரோடு திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணம் நடைபெற்ற ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இருவரும் மனப்பூர்வமாக பேசி பிரிந்திருக்கின்றனர். அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து கல்யாணப்பரிசு சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர் ஆரியனை காதலித்து இரண்டாவதாக திருமணமும் செய்து இருக்கிறார். அதுபோல ஆரியனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான்.
ஏற்கனவே ஆரியன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக இருந்ததால் இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து இருக்கிறார்கள். அதற்கு பிறகு இப்போது ஸ்ரீதிகாவோடு திருமணம் நடைபெற்று இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர்கள் தங்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.
அதோடு எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தயவு செய்து யாரும் தவறாக பேசாதீர்கள் என்று வேண்டுகோளும் வைத்திருந்தார்கள். ஆனாலும் இவர்களின் திருமணம் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீதிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் ஒரு பொண்ணு இரண்டாவது திருமணம் செய்துவிட்டார் என்றால் சிலர் என்னென்னமோ பேசுகிறார்கள்.
முதல் திருமண வாழ்க்கையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு இவரால் வாழ முடியவில்லை, இன்னொரு நடிகரோடு நடிக்க தொடங்கியதும் அவரோடு காதல் வந்துவிட்டது அதனால் முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். அதுவெல்லாம் உண்மை கிடையாது.எங்களுக்கு நடைபெற்ற முதல் திருமணத்தில் எங்களுடைய துணையுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தது.
அதனால் நாங்கள் அதிலிருந்து மனப்பூர்வமாக விலகி இருக்கிறோம். நம்முடைய மனதை ஒத்தவரோடு நம்முடைய வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு தான் நாங்கள் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறோம். நாங்கள் டீன் ஏஜ் பருவத்தில் காதலித்து திருமணம் செய்யவில்லை. மெச்சூரான வயதில்தான் இந்த முடிவு எடுத்து இருக்கிறோம்.
இந்த முடிவு எங்கள் இரண்டு பேருடைய குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்தோம். அதனால் எங்களை பற்றி தப்பு தப்பாகவும் அசிங்கமாகவும் கமெண்ட் போடுவதற்கு முன்பு என்னைப் போல ஒரு மகளோ சகோதரியோ உங்கள் வீட்டில் இருந்தால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்களோ அதை நினைத்து பார்த்து எங்களைப் பற்றி பேசுங்கள் என்று அந்த பேட்டியில் ஸ்ரீதிகா விளக்கம் கொடுத்திருக்கிறார்
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications