அந்த நல்ல விஷயம் சீக்கிரமாக நடக்க போகுது.. சந்தோஷமாக அறிவித்த நடிகை ஷபானா- ஆரியன் தம்பதி
சென்னை : ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஷபானா சீரியல் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது தங்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடக்கப்போகிறது என்று மகிழ்ச்சி செய்தியை அறிவித்திருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் ஒரு சில நடிகைகள் ஒன்றாக தங்களோடு நடிக்கும் நடிகர்களை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அதில் பலருடைய ஃபேவரைட் ஜோடியாக இருக்கும் ஷபானா மற்றும் ஆரியன் தம்பதிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சோஷியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

காதல் திருமணம்
ஷபானா செம்பருத்தி சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார். முதல் சீரியலிலேயே பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார். செம்பருத்தி சீரியல் 5 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வந்தது. பிறகு அந்த சீரியல் முடிவடைந்ததும் சன் டிவியில் மலர் சீரியலில் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியலில் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
குடும்பத்தினரின் எதிர்ப்பு
சமீபத்தில் எந்த சீரியலிலும் ஷபானா நடிக்கவில்லை. அதே நேரத்தில் ஷபானாவின் கணவர் ஆரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தான் செழியன் கேரக்டரில் ஆரம்பத்தில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் தான் ஷபானா மற்றும் ஆர்யன் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் ஷபானா வீட்டில் அவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
சீரியல் முடிவு
இதனால் ஆரியன் குடும்பத்தினர் இவர்களுடைய திருமணத்தை எடுத்து நடத்தி இருந்தனர். இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இப்ப வரைக்கும் குடும்பத்தினர் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பல பேட்டிகளில் ஷபானா எமோஷனலாக பேசியிருக்கிறார். அதுபோல பாக்கியலட்சுமி சீரியலில் பாதியிலேயே விலகிய ஆரியன் ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். சமீபத்தில் அந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது.

குழந்தை பற்றிய வதந்தி
இந்த நிலையில் இந்த தம்பதிக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறந்த தம்பதிக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த விருதை வாங்கியதும் தங்களைப் பற்றி பரவி வந்த வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதாவது ஷபானா சீரியலில் இருந்து விலகியது குறித்து அந்த நேரத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. ஷபானா கர்ப்பமாக இருப்பதால்தான் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று கூறிவந்தனர். ஆனால் அது உண்மை இல்லை அப்படி ஒரு மகிழ்ச்சி கிடைத்தால் கண்டிப்பாக ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வோம் அதை எந்த சூழ்நிலையிலும் மறைத்து வைக்க மாட்டோம் என்று கூறி இருக்கிறார்கள்.
ஆரியன் சொன்ன நல்ல செய்தி
அதோடு எங்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் சீக்கிரமாக நடக்கப் போகிறது என்று ஆர்யன் சொல்லி இருக்கிறார் .அதாவது ஆரியன் மற்றும் ஷபானா இருவரும் ஜோடியாகவே ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது அது விரைவில் கன்பார்ம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆரியன் பகிர்ந்து இருக்கிறார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications