தாலி பிரித்து கோர்த்த மகிழ்ச்சியில் ஷபானா...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: ஷபானா திடீர் திருமணம் செய்தாலும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியோடு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
தன்னுடைய தாலி பிரித்து கோர்த்தல் பங்ஷன் சிறப்பாக முடிந்த நேரத்தில் மகிழ்ச்சி பொங்க இருக்கும் அவருடைய போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
ஷபானா எளிமையான முறையில் திருமணம் செய்திருந்தாலும் அதில் எடுத்த போட்டோக்கள் தற்போது செம வைரலாக சமூக வலைதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

செம்பருத்தியில் பிரபலம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் சின்னத்தரை ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்த ஷபானா, தற்போது திருமணம் முடித்து இருக்கிறார். இவர் காதலித்து வந்த விஷயம் பலருக்கும் தெரிந்திருந்தாலும் இவர் இவ்வளவு சீக்கிரமாக திருமணத்தை முடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லையாம்.அதனால் தான் இவருடைய திருமண செய்தியை கேட்டு பலர் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கண்ணாம்பூச்சி காட்டிய காதல்
ஏற்கனவே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகனான ஆரியனை காதலிக்கும் செய்தியை இலைமறைகாயாக தான் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அதுவும் ஆரியன் தான் முதலில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு மறைமுகமாக தெரியப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து வெட்கத்தோடு ஷபானாவும் அதை உறுதி படுத்தி இருந்தார். இவர்களின் கண்ணாமூச்சி காதலை தெரிந்து கொண்டதும் ரசிகர்கள் வாழ்த்தி வந்தாலும் ஒரு சிலர் என்ன திடீரென்று இப்படி சொல்லி விட்டீர்களே என்று அலுத்துக் கொண்டனர்.

அடுத்த பங்க்ஷன்
கொட்டும் மழையில் சென்னையில் ஷபானாவின் திருமணம் எளிமையாக முடிந்ததும் அவருடைய ரசிகர்கள் ஷபானாவின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்க தொடங்கிவிட்டனர். திருமணத்தில் எடுத்த ஒவ்வொரு போட்டோவும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தற்போது அவருக்கு தாலி பிரித்து கோர்க்கும் விஷேசம் நடைபெற்றிருக்கிறது.

வர்ணிக்கும் ரசிகர்கள்
அடுத்தடுத்து ஷபானாவிற்கு நடக்கும் விஷேசங்களை பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்டிருக்கும் போது அவருடைய போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அப்படித்தான் தற்போது கூட இவருடைய போட்டோக்கள் வைரலாகி வருகிறது. கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்க கன்னத்தில் மஞ்சள் தடவிக்கொண்டு ஷபானா மற்றும் ஆரியன் இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர் .இந்த நிலையில் இவர் செம்பருத்தி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா??இல்லையா??என்று பலர் புலம்பி வருகின்றனர். இதைப்பற்றி சமூகவலைத்தளத்தில் பலர் தங்களுடைய கேள்விகளை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications