விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம்? எனக்கும் அண்ணி வருவார்! சண்முகபாண்டியன் பூரிப்பு! யார் அவர்?
சென்னை: எனக்கு அண்ணி விரைவில் வருவார் என நடிகர் சண்முகபாண்டியன் தெரிவித்தார். படைத்தலைவன் திரைப்படத்தின் பிரஸ் ஷோவிற்கு பிறகு அவர் இந்த விஷயத்தை தெரிவித்தார். தனது அண்ணன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படைத்தலைவன் திரைப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடந்தது. இந்த விழாவில் ஹீரோ சண்முக பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், எனது அம்மாவை அண்ணியார் என அனைவரும் பாசமாக அழைப்பார்கள்.
எனக்கு அண்ணி விரைவில் வருவார். எனது அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அதற்கான நேரம் விரைவில் வரும் என சண்முகபாண்டியன் தெரிவித்திருந்தார். எத்தனையோ புதுமுகங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த்.
ஆனால் அவருடைய மகன் சண்முகபாண்டியனால் அந்த அளவுக்கு திரைத்துறையில் சாதிக்க முடியவில்லை. அவருக்கான வாய்ப்புகளும் சரியாக வரவில்லை. இந்த நிலையில் படைதலைவன் எனும் படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக உள்ளன. விஜயகாந்தின் ஆக்ரோஷமான சண்டையை சண்முக பாண்டியன் அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
சண்டை காட்சிகளில் அர்ஜுனுக்கு பிறகு சண்கமுபாண்டியன் வருவார் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தில் பொட்டு வச்ச தங்க குடம் என்ற பாடல் வருவது படத்திற்கு சிறப்பை கொடுத்துள்ளது.
இந்த படத்தின் முதல் நாள் ரூ 50 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தெரிகிறது. அது போல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வசூல் சற்று அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தக் லைஃப் படத்தால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் அந்த படத்தை தவிர்த்துவிட்டு படைதலைவன் படத்திற்கு செல்கிறார்கள்.
சுருக்கமாக சொன்னால் அப்பாவின் ஸ்டைலை அப்படியே சண்முகபாண்டியன் கொண்டு வந்திருக்கிறார் என சொல்லலாம். படம் வெளியாகி பாசிட்டிவ் கமென்ட்டுகளை பெற்றுள்ளதால் சண்முகபாண்டியனும் படக்குழுவினருக்கு விருந்து வைத்துள்ளார். அவர்களுக்கு புத்தாடைகளையும் வழங்கியுள்ளார்.
மதுரைவீரன், சகாப்தம் உள்ளிட்ட படங்களில் இருந்து மாறுபட்ட தோற்றத்தில் படைத்தலைவனில் நடித்திருக்கிறார் சண்முகபாண்டியன். படத்தில் விஜயகாந்த் சிஜிஐ காட்சிகளுக்கு விசில் பறக்கிறது. இந்த படத்தின் பிரஸ் ஷோவில்தான் சண்முகபாண்டியன் , அண்ணி குறித்து பேசியுள்ளார்.
விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருன் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கொரோனா , விஜயகாந்தின் உடல்நிலை பிரச்சினைகளால் திருமணம் தள்ளி போனது. இந்த நிலையில்தான் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எனக்கும் ஒரு அண்ணி வருவார் என்றும் சண்முகபாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications