விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி! ஆனால் அவர் என் வாழ்க்கையில் செய்த உதவி!- சாந்தி வில்லியம்ஸ்
சென்னை: பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உடல்நிலை குறைபாட்டால் உயிரிழந்தார். அவருடைய இறப்பு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி நடிகை சாந்தி வில்லியம்ஸ் சில தகவல்களை பேசி இருக்கிறார்.
அதில் சாந்தி வில்லியம்ஸ் பேசுகையில் என்னை பொறுத்தவரையில் விஜயகாந்த் அன்னதான பிரபு... நிஜமானவே ஒரு கடவுள்தான். அவர் மட்டும் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ இருந்திருந்தால் உலக மக்களுக்கு நல்லது செய்திருப்பார். மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவரை அன்னதான பிரபு மட்டுமல்ல கடவுளுக்கே சமம் என்று கூட சொல்லலாம்.

அதற்கு காரணம் அவர் உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துக்கொண்டு செல்லும்போது கோயம்பேடு பாலம் அருகே இரண்டு கழுகுகள் மேலே வட்டம் இட்டது. அப்போது எல்லோருக்குமே தெரியும் அவர் கடவுளாகி ஆகிவிட்டார் என்று நான் விஜயகாந்துடன் கேப்டன், நரசிம்மா போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். அதில் நரசிம்மா பட சூட்டிங் டி. ராஜேந்திரன் கார்டனில் நடந்தது.
அதில் எனக்கு இரண்டு நாட்கள் வேலை இருந்தது. அதனால் எனக்கான டிரஸ் பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி தந்தார்கள். எல்லாம் முடிந்து நான் வீட்டிற்கு கிளம்பும்போது மேனேஜர் வந்து பெரிய கவர் ஒன்று என்னிடம் தந்தார் அதில் நிறைய பணம் இருந்தது. ஆனால் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம். ஆனால் அங்கே அதிகமாக பணம் இருந்தது. அதனால் இந்த கவர் எனக்கு இல்லை என்று நான் அவரிடம் சொன்னேன்.
ஆனால் அவர் இது உங்களுக்கு தான் என்று சொன்னார். அந்த நேரத்தில் அங்கு வந்த விஜயகாந்த் என்ன பிரச்சனை என என்னிடம் கேட்டார். நான் பணம் அதிகமாக இருப்பதாக சொன்னேன். அதற்கு விஜயகாந்த் எடுத்துட்டு போங்க அது உங்களுக்குத்தான் என்று கூறினார். அதற்கு காரணம் எனக்கு அப்போது தெரியவில்லை. பிறகு தான் தெரிந்தது அதாவது விஜயகாந்த் வாய்ப்பு கேட்டு அலைந்த காலத்தில் ஜெமினி பாலம் அருகே உள்ள லாட்ஜில் தான் விஜயகாந்த் என்னுடைய கணவர் வில்லியம்ஸ் எல்லோரும் தங்கி இருந்திருக்கிறார்கள்.
அப்போது வில்லியம்ஸ்க்கும் விஜயகாந்த்க்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது வில்லியம்ஸ் சொல்லி தான் எனக்கு தெரியும். வில்லியம்ஸ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற என்பதை தெரிந்துதான் எனக்கு விஜயகாந்த் அதிகமாக பணம் கொடுத்திருக்கிறார். இதனை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. விஜயகாந்த் பலருக்கும் வயிறார சாப்பாடு போட்டு பலருடைய கஷ்டத்தை நீக்கி இருக்கிறார்.
அதுபோல அவருடைய குடும்பத்தினர் அந்த ஒன்றை மட்டும் விடாமல் செய்ய வேண்டும். அதுதான் விஜயகாந்தின் பெரிய ஆசையாக இருக்கும். என்னுடைய கணவர் நடிகர் மோகன் லாலுக்கு என் வீட்டில் பல நாள் சாப்பாடு கொடுத்திருக்கிறார். அவர் சூட்டிங் போகும் இடம் எல்லாம் எங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு போகும். ஆனால் என்னுடைய கணவர் இறந்த போது மோகன்லால் வரவே இல்லை.
அந்த நேரத்தில் மோகன்லால் ஊரில் தான் இருந்தார் ஒரு போன் பண்ணி கூட கேட்கவே இல்லை. ஆனால் வாய்ப்பு தேடி அலைந்த போது என்னுடைய கணவரோடு விஜயகாந்த் இருந்ததாலையே என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் எனக்கு அதிகமான பணம் தந்து அனுப்பி வைத்தார். அவர் எப்போதுமே கடவுள்தான் என்று கண்கலங்க விஜயகாந்த் குறித்து சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications