"ஹவுஸ் அரெஸ்ட்".. ஷோபனாவுக்கு நடந்த துயரம்.. மரணத்தின் பின்னணியில் "நடிகர்"? பலே ஹேமா கமிட்டி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் ஹேமா கமிட்டி வந்தபிறகு, இப்போது நிறைய மாற்றம் தென்பட்டுள்ளது.. சினிமாவில் நிலவும் ஆணாதிக்கம் குறித்து நிறைய பேர் பேச துவங்கிவிட்டார்கள்.. நடிகைகள் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை சொல்லி வருகிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அத்துடன், நடிகை ஷோபனா தற்கொலை குறித்து தற்போது பலரும் பேசிவருவதையும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஷோபனாவின் சகோதரி சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "என்னுடைய அக்காவிற்கு அல்சர் பிரச்சனை இருந்ததால், வயிறு வலி அதிகமாக இருந்தது.. மேலும், சிக்கன்குனியாவால் ஷோபனா பாதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமாகிவிட்டது.. அதுபோல

Television Shobana Actor Vadivelu

இந்த நேரத்தில் தான் காதல் தோல்வியும் ஏற்பட்டது. இதனால், உடல், மனம் பாதித்து தற்கொலை என்ற தப்பான முடிவு எடுத்துவிட்டார்.. என் அக்கா இறந்ததுமே, அவளை பற்றி நிறைய வதந்திகள் பரவின. அந்த நேரத்தில் காமெடி நடிகர் ஒருவர்தான் அக்காவின் இறப்புக்கு காரணம் என்றார்.. அதேபோல, நடிகர் வடிவேலு கூட இணைத்து பேசினார்கள்.

ஹவுஸ் அரெஸ்ட்

இது போன்ற தவறான பேச்சுக்களால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். என் அம்மாவும் வெளியே போக முடியல. ஷோபனாவை திட்டினீங்களா? ஏன் இறந்தாங்க? என்று பலரும் கேள்வி கேட்டு துளைத்ததால், வீட்டுக்குள்ளேயே ஹவுஸ் அரெஸ்ட் ஆயிட்டாங்க. உண்மையிலேயே அக்காவுக்கு உடம்பு சரியில்லாமல் அவதிப்பட்டு, அதனால்தான் தப்பான முடிவு எடுத்துவிட்டார்" என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில், Reflect Time என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற நிகழ்ச்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி குழுவில் இடம்பெற்றிருந்தார் ஷோபனா.. காமெடி நடிகையாக உருவானவர்.. வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்தார்.. திடீரென ஒரு நாள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்..

காமெடி நடிகர்

இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.. அவரது தற்கொலைக்கு காரணம், "ஒரு காமெடி நடிகர்" என்று பரவலாக அப்போதே சொன்னார்கள்.. ஆனால், சினிமா வட்டாரங்களில் வடிவேலு என்றும், மீடியாக்களில் காமெடி நடிகர் என்றும் பெயரை சொல்லாமல் கிசுகிசுக்கப்பட்டன.. வடிவேலு தந்த டார்ச்சரால்தான், ஷோபனா இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் மறைமுகமாக சொன்னார்கள்.

ஆனால், ஷோபனா இறந்தபோதே ஏன் இதையெல்லாம் சொல்லவில்லை என்றால், வடிவேலுவுக்கிருந்த சினிமா செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு போன்ற காரணங்களால், யாருமே அதை பற்றி பேசவில்லை.

இப்போது கேரளாவில் ஹேமா கமிட்டி வந்தபிறகு, சினிமா பிரபலங்கள் பேச்சுக்களில் நிறைய மாற்றம் தென்பட்டுள்ளது.. சினிமாவில் நிலவும் ஆணாதிக்கம் குறித்து நிறைய பேர் பேச துவங்கிவிட்டார்கள்.. நடிகைகள் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை சொல்லி வருகிறார்கள்,

வருத்தங்கள் பகிர்வு

அந்தவகையில், ஷோபனாவின் சகோதரியும், பேட்டி ஒன்றில் தன்னுடைய வருத்தங்களை பகிர்ந்து கொண்டார். இதை அவர் முன்னமேயே செய்திருக்க வேண்டும்.. என்றைக்கோ நடந்த நாகேஷின் மைத்துனர் இறப்பு குறித்து இப்போது பேசுகிறார்கள்.- சில்க் ஸ்மிதா மரணம் குறித்தும் மீண்டும் பேச துவங்கியிருக்கிறார்கள். சில ரகசியங்கள், மர்மங்கள் மறைக்கப்பட்ட நிலையில், அவையெல்லாம் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

வடிவேலுவுக்கு இன்று பெரிதாக மார்க்கெட் இல்லை. இப்போது சில நடிகைகள், நடிகர்களும்கூட வெளிப்படையாக வடிவேலு பற்றி பேச துவங்கியிருக்கிறார்கள். வடிவேலுவுடன் பிரபலமான நடிகையை இணைத்துகூட செய்திகள் கசிந்தன. சினிமாவில் வடிவேலு எப்படி இருப்பார்? திரை மறைவில் எப்படி இருப்பார்? என்றும் சொல்லி வருகிறார்கள். தன்னையே காப்பி அடித்து நடிப்பதற்காக வடிவேலு தாக்கிவிட்டதாக காதல் சுகுமாரன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்,.

தங்கையாக, மகளாக

வடிவேலுவுடன் நடித்த பல நடிகர்களுக்கு நாளைக்கு என்ன காட்சி? எங்கே ஷூட்டிங் என்றுகூட தெரியாது.. எதையுமே அவர்களுக்கு சொல்ல மாட்டாராம்.. சக நடிகைகளை தன்னுடைய தங்கையாக, மகளாக வடிவேலு பாவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் நடந்து கொள்ளவில்லை என்று அவருடன் நடித்த பல நடிகைகள், பேட்டிகளில் சொல்லி வருவதை காண முடிகிறது. அடிப்படையில் உண்மை இல்லாமல் இதுபோன்ற பேச்சுக்கள் வராது " என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+