ஷோபனா இறப்புக்கு காமெடி நடிகர் காரணமா? ரொம்ப தப்பா பேசிட்டாங்க! விளக்கம் கொடுத்த சகோதரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி திரைப்படங்களிலும் நடித்து வந்த ஷோபனா சில வருடங்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் அவருடைய சகோதரி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நடிகர் சந்தானத்திற்கு கூட லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தான் சினிமா வாய்ப்பும் கிடைத்தது. அதுபோல லொள்ளு சபா நிகழ்ச்சியில் வெண்ணிறாடை மூர்த்திக்கு ஜோடியாக நடித்த ஷோபனா சினிமாக்களிலும் நடித்து வந்தார். நடிகை கோவை சரளாவுக்கு பிறகு அடுத்த இடத்தில் இவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் கடந்த 2011 ஆம் ஆண்டு யாரும் எதிர் பார்க்காத நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷோபனா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதிலும் அந்தப் படத்தில் ஷோபனாவின் அப்பா, என்னமா அங்க சத்தம் என்று கேட்கும் போது இல்லப்பா பேசிகிட்டு இருக்கோம் என்று இவர் பேசும் டயலாக் வேற லெவலில் வைரல் ஆனது. அதிலும் வடிவேலுவிடம் நீ என் பிள்ளைகளுக்கு அப்பன் எனக்கு புருஷன் என்று இவர் பேசும் டயலாக்கும் அதிகமாக பிரபலம் அடைந்திருந்தது.
அதை தொடர்ந்து சிறுத்தை திரைப்படத்திலும் ஷோபனாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. அதிலும் நடிகர் கார்த்தியும் ஷோபனாவும் சண்டை போடும் காட்சிகள் அந்த திரைப்படத்தில் காமெடியாக இடம் பிடித்திருக்கும். ஆனால் ஷோபனா யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தற்கொலை செய்திருந்தார்.

அந்த நேரத்தில் ஷோபனாவுக்கு 32 வயதாகி இருந்தது. ஆனால் அவருக்கு திருமணம் முடியவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய அம்மாவோடு வாழ்ந்து வந்த ஷோபனாவிற்கு உடல்நிலை பிரச்சனை இருந்து வந்ததாகவும் அதனால் விரக்தியில் ஷோபனா தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த நேரத்தில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஷோபனாவின் சகோதரி கூறுகையில் என்னுடைய அக்காவிற்கு அல்சர் பிரச்சனை இருந்தது. அதனால் வயிறு வலி அதிகமாக இருக்கும். அது போல அவருக்கு சிக்கன்குனியா பாதித்த பிறகு உடல்நிலை மோசமாகி இருந்தது. அதுபோல அந்த நேரத்தில் தான் காதல் தோல்வியும் ஏற்பட்டிருந்தது. அதனால் மனதளவிலும் உடல் அளவிலும் வேதனையில் இருந்த என்னுடைய சகோதரி தற்கொலை என்ற தப்பான முடிவு எடுத்துவிட்டார்.

ஆனால் அவர் இறந்த பிறகு பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. அந்த நேரத்தில் செய்திகளில் காமெடி நடிகர் ஒருவர்தான் அக்காவின் இறப்புக்கு காரணம் என்று சொன்னார்கள். அதுபோல நடிகர் வடிவேலு கூட இணைத்து பேசினார்கள். இதுவெல்லாம் ரொம்ப தப்பானதாக இருந்தது. எங்களை மனதளவில் ரொம்பவும் கஷ்டப்படுத்தியது.
அதற்கு பிறகு எங்க அம்மாவும் வெளியே எங்கேயும் போவது கிடையாது. என்னுடைய அம்மா நடிகை தான். ஆனால் அவங்க வெளியே போகும்போது எல்லாம் ஷோபனா எதற்காக இந்த முடிவு எடுத்தா? என்பது தான் பலருடைய கேள்வியாக இருந்தது. அதற்கு பயந்தே நாங்கள் வீட்டிற்குள் முடங்க தொடங்கி விட்டோம்.
உண்மை என்னவென்று தெரியாமல் சிலர் தவறாக செய்திகள் கொடுப்பதால் அதையே உண்மை என்று மக்களும் நம்பி விடுகிறார்கள். ஆனால் நிஜத்தில் அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் அவர் அந்த தப்பான முடிவு எடுத்து விட்டார் என்று அந்த பேட்டியில் ஷோபனாவின் சகோதரி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications