பிக் பாஸால தான் இப்படி ஆச்சு.. கமல் சொன்னதை புரிஞ்சிக்க முடியல.. நடிகை சுருதி பெரியசாமி ஓப்பன் டாக்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை சுருதி பெரியசாமி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனக்கு என்ன மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டது என்பது பற்றி அதில் கூறியிருக்கிறார்.

அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றியும், அவர்கள் அப்படி நடந்து கொள்வதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் சுருதி பேசியிருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். பல சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் முயற்சித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில போட்டியாளர்கள் அதுவரைக்கும் தாங்கள் சம்பாதித்து வைத்திருந்த பெயரையும் புகழையும் கூட இழந்து போயிருக்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தவர்களும் உண்டு என்பதற்கு சாட்சியாக தான் இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சுருதி பெரியசாமி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் யாருக்கு எப்படி வாழ்க்கை அமைந்ததோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் பல வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஒரு சில நாட்களிலேயே எனக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் ஏற்கனவே ஒரு ஷார்ட் பிலிமில் நடித்துக் கொண்டிருந்தேன் ஆனாலும் இந்த திரைப்படத்தில் என்னை செலக்ட் செய்து இருந்தார்கள்.
அதுபோல இப்போது நான் நடித்துக் முடித்த வாழ்வு தொடங்கும் இடம் நீதானே என்ற திரைப்படத்தின் வாய்ப்பும்கூட எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை பார்த்து தான் கிடைத்தது. பலர் ப்ரொபைலை கொண்டு ஒவ்வொருவரிடமாக வாய்ப்புக்காக கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நான் இதுவரைக்கும் யாரிடமும் ப்ரோபைல் கொண்டு போனதே இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகள் எல்லாமே பிக் பாஸ் பார்த்து தான் கிடைத்திருக்கிறது.
நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பெரிய அளவில் பிரபலம் கிடையாது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் என்னை பார்த்து தான் பலர் அவர்களுடைய கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என்று என்னை செலக்ட் செய்து கொண்டிருக்கின்றனர். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரும் விளையாடிக் கொண்டிருப்பதை வெளியே இருந்து பார்க்கும்போது அவர்களைப் பற்றி எப்படி எல்லாமோ பேசலாம். ஆனால் உள்ளே அவர்கள் வெளி உலகம் எதுவும் தெரியாமல் அங்கு நடக்கும் நிகழ்வுக்கு தகுந்த மாதிரி தான் ரியாக்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது வெளியே என்ன நடக்கிறது? என்ன மாதிரி நம்முடைய பெயர் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு இருந்தவர்கள் சிலர் கமல் சார் பேசுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் என்னால் அதை யூகிக்கவே முடியவில்லை. இப்போது நடந்து கொண்டிருக்கும் ஏழாவது சீசனில் என்னுடைய நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் வினுஷா, பூர்ணிமா எல்லோரும் என்னுடைய பிரண்ட்ஸ் தான் என்று அந்த பேட்டியில் நடிகை சுருதி பெரியசாமி பேசியிருக்கிறார்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications