ஹிந்தி பிக் பாஸில் கதறி அழுத ஸ்ருதிகா.. பார்ப்போரை கலங்க வைத்த காட்சி.. நடந்த சம்பவம் இதுதான்
சென்னை: ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தமிழ் நடிகை ஸ்ருதிகா கதறி அழுத ப்ரோமோ தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. என்ன நடந்தது? எதற்காக ஸ்ருதிஹா கதறி அழுது, நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
16 வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ஸ்ருதிகா நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் பெயர் வாங்கவில்லை என்பதால் சினிமாவை விட்டு விலகி படிப்பு, பிசினஸ் என்று களமிறங்கி விட்டார். அதற்கு பிறகு காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையும் பிறந்த பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் அவருடைய உண்மையான கேரக்டரை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது பலருக்கும் அப்போதுதான் தெரியவந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய பிசினஸை கவனித்துக் கொண்டிருத்திகார். திடீரென்று ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதுவரைக்கும் ஹிந்தி பிக் பாஸில் தமிழ் நடிகைகள் யாரும் கலந்து கொண்டது கிடையாது. முதல் முறையாக இவர் தான் அந்த நிகழ்ச்சியில் அடி எடுத்து வைத்திருக்கிறார். முதலில் இருந்தே இவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் துளிர்க்க தொடங்கி விட்டது. தமிழ் பிக் பாஸ் தொடங்கிய அதே அக்டோபர் ஆறாம் தேதி தான் ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஸ்ருதிகாவை ஏற்றுக்கொள்ளாத ஹிந்தி ரசிகர்கள் போக அவரை ஏற்றுக் கொள்ள தொடங்கிவிட்டனர். ஆனால் இன்று வெளியான ப்ரோமோ பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறது. இதுவரைக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலகலப்பாக எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் ஸ்ருதிகாவை தான் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று தான் நம்பிய ஒரு தோழி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி கதறி அழுத ஸ்ருதிகாவை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு என்று பதறிப்போய் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இதுவரைக்கும் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் அசால்டாக கேட்டும், டாஸ்க்குகளில் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தான் முடிந்த வரைக்கும் போராடி வந்த ஸ்ருதிகா கரன்வீர், ஷில்பா மற்றும் சும் என்ற மூன்று பேரோடு நட்பு வைத்திருந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு ஷில்பாவிடம் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு அமைதியாக மாறிவிட்டார். ஸ்ருதிகா ஜாலியாக பேசியதை ஷில்பா தவறாக புரிந்து கொண்டார். எப்போதுமே ஸ்ருதிகாவிடம் முகத்துக்கு நேராக புகழ்ந்து பேசும் சில்பா முதுகுக்கு பின்னாடி அவரை மட்டம் தட்டி சிரிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இது குறித்து கேள்வி கேட்டபோதுதான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்ருதிகாவிற்கு கரண் வீர் மற்றும் சும் உடன் சண்டை ஏற்பட்டு இருக்கும் ப்ரோமோ தான் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது நேற்று ஒரு டாஸ்க் நடைபெற்று இருக்கிறது.
அப்போது இந்த வார எலிமினேஷனில் இருக்கும் ஒரு போட்டியாளரை காப்பாற்றிக் கொண்டு அந்த போட்டியாளர் இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் சும்-மை காப்பாற்றி ஸ்ருதிகா எலிமினேஷனுக்கு வந்திருக்கிறார்.
ஆனால் பிறகு சும் ஏதோ ஸ்ருதிகாவை சொல்லி இருக்கிறார். அந்த காட்சிகள் இன்னும் காட்டப்படவில்லை. அதற்காக ஸ்ருதிகா மனம் உடைந்து கதறி அழுதிருக்கிறார். அதோடு நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே போறேன் என்று அவர் அந்த ப்ரோமோவில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஸ்ருதிகாவின் ரசிகர்களாக நீங்க இருந்தால் இந்த வாரம் அவர் எலிமினேஷனில் இருக்கிறார் அவருக்கு ஓட்டளிக்க மறந்து விடாதீர்கள் மக்களே.












Click it and Unblock the Notifications