Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் முருகனுக்கு அரை கிலோ தங்கத்தில் வேல் செலுத்திய தமிழ் நடிகர்.. அதுவும் இப்படி ஒரு காரணமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில், நடிகர் சிம்புவின் ஆரம்பகாலப் படமான 'எங்க வீட்டு வேலன்' திரைப்படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்குக் காணிக்கையாக, அவர் 63 பவுனில் தங்க வேல் செய்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செலுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலைச் சிம்புவின் தந்தையும், இயக்குநருமான டி. ராஜேந்தர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்ணீர்மல்க பகிர்ந்துகொண்டார்.

Simbu Silambarasan Thiruchendur

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாகத் திகழ்கிறது. இங்குச் சுப்பிரமணியக் கடவுள், சூரபத்மனை வென்று அருள்பாலிக்கிறார். கடலோரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், திருப்பதியைப் போலவே பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய அளவுக்கு நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சிம்புவின் பக்தி

நடிகர் சிம்பு, தனது ஆரம்ப காலம் முதல் இன்றுவரை கடவுள் நம்பிக்கை கொண்டவராகவே இருக்கிறார். தற்போது அவர் வள்ளலாரின் அருளைத் தேடிச் சென்றுள்ள நிலையில், டி. ராஜேந்தர் தனது மகனின் பக்திச் செயல் குறித்துப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு 1992 ஆம் ஆண்டு நடித்த 'எங்க வீட்டு வேலன்' என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு சாதாரணப் படமாக எடுத்திருந்தாலும், அது அத்தனை கோடிகளை அள்ளியது என டி.ஆர். கூறினார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர், சிம்பு 63 பவுனில் (சுமார் அரை கிலோ தங்கம்) தங்க வேல் செய்து, அதைத் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார். 63 பவுன் தங்க வேலின் இன்றைய மதிப்பு சுமார் 63 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

அதுபோல "தன் மகன் சிலம்பரசன் கையால் வச்ச வேல் தான், இன்றைக்கும் தங்கத் தேர் சென்றால் எடுத்து வைக்கிறார்கள்" என்று டி.ராஜேந்தர் பெருமையுடன் கண்ணீர்மல்கப் பகிர்ந்துகொண்டார்.

Simbu Silambarasan Thiruchendur

வெயிலில் வெறும் காலில் ஆடிய சிம்பு

டி. ராஜேந்தர், நிகழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார். 'எங்க வீட்டு வேலன்' படத்தின் பாடல் காட்சி ஒன்றை திருநீர்மலையில் படமாக்கினாராம் டி.ஆர். அதில் சிம்பு கொளுத்தும் வெயிலிலும் வெறும் காலில் பால் காவடி எடுத்து வரும் காட்சியும் இருந்ததாம். சிம்பு சூடு தாங்க மாட்டார் என்பதால் காலில் சாக்ஸ் மாட்டிக் கொண்டு நடிக்கச் சொன்னாராம் டி.ஆர். ஆனால், சிம்பு, அவ்வாறு நடிக்க மறுத்து, வெறுங் காலிலேயே அந்தப் பாடல் காட்சியில் நடித்துக் கொடுத்தாராம்.

சிம்புவின் இந்தத் தீவிரமான பக்தியே, அவர் இன்று வள்ளலாரிடம் சென்று அருள் தேடும் நிலைக்குக் காரணமாக இருக்கிறது என்றும் டி. ராஜேந்தர் கூறினார். சிம்புவின் பக்தி செயலும், தந்தையின் நெகிழ்ச்சியும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+