சசிகுமார் உடன் நடித்தது இதற்காகத்தான்.. எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. வெளிப்படையாக பேசிய சிம்ரன்
சென்னை: 90 சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை சிம்ரன் இப்போது மீண்டும் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி என்ற திரைப்படத்தில் சசிகுமாருடன் நடித்திருக்கிறார். இது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பெருமையாக பேசி இருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகிகள் ஒரு சிலர் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விட்டார்கள், இப்போது மீண்டும் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்கள். ஆனால் சில நடிகைகள் மட்டும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சில முக்கியமான கேரக்டரில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சிம்ரன்.

தனித்தன்மை
சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய சிம்ரன் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தான் இருந்தார். இப்போது தொகுப்பாளினியாக இருந்து கதாநாயகியாக மாறிய ஒரு சில நடிகைகளை இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்கும். ஆனால் சிம்ரன் அப்போதே தொகுப்பாளினியாக இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார்.
சிம்ரன் ஹிட் திரைப்படம்
சிம்ரன் டான்ஸ் மற்றும் நடிப்பு, நகைச்சுவை என அனைத்திலும் சிறந்து விளங்கிய சில நடிகைகளில் முக்கியமானவர். விஜய், அஜித், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன் போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
சிம்ரனின் புது படம்
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான சசிகுமாருடன் இணைந்து இப்போது டூரிஸ்ட் பேமிலி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான போஸ்டர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சசிகுமார் உடன் ஜோடியாக சிம்ரன் நடித்தது குறித்து அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது.

சசிகுமார் தான் காரணம்
அதற்கு அவர் பேசும்போது, நல்ல குடும்பக் கதையாக இருந்ததால் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். அதுமட்டுமல்ல அதற்கு இன்னொரு காரணமும் உண்டு அதற்கு முக்கிய காரணம் சசிகுமார் தான். சசிகுமார் மிகப்பெரிய இயக்குனர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமைதான். சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் கூடாது. திறமைக்கு முதலிடம் இருக்க வேண்டும்.
மகனின் படிப்பு
அந்த வகையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பதை என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். இனி அடுத்தடுத்து குடும்ப செண்டிமெண்ட் கதைகளில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். அதேபோல ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கவும் விரும்புகிறேன். இப்போதைக்கு லண்டனில் என்னுடைய மூத்த மகன் படிப்புக்காக அவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் இந்தியாவிற்கு திரும்புவேன் அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்வேன் என்று அந்த பேட்டியில் சிம்ரன் பேசியிருக்கிறார்.
குட் பேட் அக்லி வெற்றி
அதுபோல குட் பேட் அக்லி திரைப்படத்தில் சிம்ரன் சில காட்சிகள் வந்திருந்தாலும் பலருடைய கைதட்டலை வாங்கிவிட்டார். அவருடைய என்ட்ரிதான் இந்த திரைப்படத்தில் அதிகமாக பேசப்பட்டது. குட் பேட் அக்லி திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இனி தமிழில் அதிக திரைப்படங்களில் நடிக்க இருக்கிறேன் என்று சிம்ரன் கூறி இருக்கிறார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications