சர்ப்ரைஸ்னா இதுதான்.. அனிதா குப்புசாமிக்கு மகள் கொடுத்ததை பாருங்க.. 70 லட்சம் கருப்பு உருவம்
சென்னை: நாட்டுப்புற பாடகி என அழைக்கப்படும் அனிதா குப்புசாமி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தனக்கு தன்னுடைய மகள் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் 70 லட்சத்திற்கு தன்னுடைய மகள் தனக்காக வாங்கி கொடுத்த அன்பு பரிசு பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் ரசிகர்கள் பலர் அனிதா குப்புசாமிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நம்மில் பலருக்கும் அனிதா குப்புசாமியை தெரிந்திருக்கும். நாட்டுப்புற பாடகி ஆக இருந்து வரும் அனிதா குப்புசாமியும், அவருடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமியும் சேர்ந்து பல கிராமிய பாடல்களை எழுதியும் பாடியும் வருகிறார்கள். அனிதா குப்புசாமி தன்னுடைய கணவரோடு சேர்ந்து இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய பாடல்கள் மூலமாக எய்ட்ஸ், வரதட்சனை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், பெண் சிசுக்கொலை, குழந்தை உழைப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், தாய்ப்பால் போன்ற பல விழிப்புணர்வுகளை பாடல்களாக பாடி பலரையும் விழிப்படைய செய்து வருகிறார்கள். அனிதா குப்புசாமியும் அவருடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமியும் காதலிக்கும் போது பல பிரச்சனைகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

அது குறித்து அனிதா குப்புசாமி தங்களுடைய காதல் கதையை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பெருமையாக பேசி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு பல்லவி என்கிற ஒரு மகள் இருக்கிறார். அவர் தான் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவிற்கு இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்திருக்கிறார். அதாவது அவங்க என்ன சர்ப்ரைஸ் கொடுத்தாங்கன்னா தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவுக்கு ஜாக்குவார் கார் ஒன்று நேரடியாக வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.
ஏற்கனவே ஒருமுறை நாம இப்படி ஒரு கார் வாங்க போகிறோம் என்று டாக்டர் பல்லவி அகர்வால் சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது அந்த காரை வாங்கிட்டு வந்ததை பற்றி சொல்லாமல் திடீரென்று தன்னுடைய அப்பா அம்மா முன்னாடி அந்த காரை கொண்டு வந்து நிறுத்த அதை பார்த்து அனிதா குப்புசாமி மற்றும் அவருடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமி இருவரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதோடு இவர்களுக்கு அதிகமான ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதுபோல அனிதா குப்புசாமிக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று பல கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தாராம். அப்போது பல வருடங்கள் கழித்து தன்னுடைய ஆசைப்படியே ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
அனிதா குப்புசாமிக்கு அந்த குழந்தை ஆபரேஷன் மூலமாகத்தான் பிறந்ததாம். இரண்டாவதாக பிறந்த அந்த ஆண் குழந்தை அவ்வளவு அழகாகவும் முகத்தில் ஒரு வசீகரத்தோடு இருந்ததாம். ஆனால் அனிதா குப்புசாமி குழந்தை பிறந்த பிறகு மயக்கத்தில் இருந்த போது அந்த குழந்தைக்கு ஏதோ தவறான ஒரு ஊசி செலுத்தி விட்டார்களாம்.
அதனால் அந்த குழந்தை நெஞ்செல்லாம் எரிந்து குழந்தை இறந்து விட்டது என்று ஒரு பேட்டியில் கண் கலங்க பேசி இருந்தார். அதற்கு பிறகு தன்னுடைய ஒரே மகளுக்காக பார்த்து பார்த்து பல சந்தோஷங்களை கொடுத்திருந்த நிலையில் தன்னுடைய பெற்றோர்களுக்கு அவர்களுடைய மகள் டாக்டர் பல்லவி கொடுத்த இன்ப அதிர்ச்சி பார்ப்போரை சிலிர்க்க வைத்திருக்கிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications