கர்மாவும், கடவுளும் அவர்களுக்கு பதிலடி.. உண்மை வெல்லட்டும்.. பாடகி சின்மயியின் ஆதங்கமான பதிவு
சென்னை: பாடகி சின்மயி பற்றிய செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. "தக் லைஃப்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய "முத்தமழை பாடல்" பெரிய அளவில் ஹிட்டாகி விட்டது. இந்த நிலையில் சின்மயி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் பற்றி காட்டமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
பாடகி சின்மயி பாடுவதற்கு சில வருடங்களாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய "முத்தமழை பாடல்" தான் இப்போது சோஷியல் மீடியா பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ரீல்ஸ்களில் இந்த வீடியோ டிரெண்டாகி கொண்டு இருக்கிறது. தொடர்ந்து ஒரு வாரமாக இந்த வீடியோ தான் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

சின்மயி பாடிய முத்தமழை பாடல்
இந்த நிலையில் சின்மயி பற்றிய பேச்சுகளும் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. சின்மயிக்கு எதற்காக பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு 250 ரூபாய் சந்தா கெட்டாததால் நடிகர் சங்கத்தில் இருந்து அவர் பாடுவதற்கு டப்பிங் பேசுவதற்கும் தடைவிதிக்கப்பட்ட சம்பவம் இப்போது மீண்டும் அசை போடப்படுகிறது.
மக்கள் ஆதரவு
சின்மயிக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இது பற்றி தடை விதித்த நடிகர் சங்கத்தை சார்ந்த நடிகர் ராதாரவி பேசிய பேட்டிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல தக் லைஃப் திரைப்படத்தின் முத்தமழை பாடலை பாடியது பாடகி தீ தான். ஆனால் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் கடைசி நேரத்தில் தான் அந்த பாடலை பாடுவதற்கு கமிட் ஆகி இருக்கிறார். கடைசியில் சின்மயி பாடிய அந்த பாடல் இப்போது அவருக்கு மக்கள் மனதில் ஒரு பெரிய ஆதரவை ஏற்படுத்தி இருக்கிறது.

மன்னிப்பு கேட்ட சின்மயி
இந்த நிலையில் பாடகி தீயை விட சின்மயியின் பாடல் அருமையாக இருக்கிறது என்று பலர் பாராட்டி வருகின்றனர். அது குறித்து தீ- யிடம் சின்மயி மன்னிப்பு கேட்டது பலரையும் வியக்க வைத்திருந்தது. இந்த நிலையில் சின்மயி தொடர்பான மீடு விவகாரங்களும் சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு இடையில் சின்மயி அவருடைய facebook பக்கத்தில் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.
பாடகி சின்மயி பதிவு
அதில், "கடந்த சில வருடங்களாக நான் அனுபவித்த மோசமான வார்த்தைகள், அவமானங்கள், துன்புறுத்தல்கள், பொய்யர், விபச்சாரி, அட்ஜஸ்மென்ட் செய்து கொண்ட பெண் என்ற பல விமர்சனங்களை எதிர்கொண்டு அது எல்லாவற்றையும் ஒரே மூலமான கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். தற்போது நான் பெற்று வரும் ஆதரவுகளையும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான ஆதரவையும் ஒரே மூலமாக என் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். கர்மாவும், கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பதிலடி கொடுக்கட்டும். இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தப்பி பிழைத்த அனைவருக்கும் இப்போது எனக்கு கிடைத்த ஆதரவு பெறட்டும். உண்மை வெல்லட்டும்" என்று அந்த பதிவில் சின்மயி குறிப்பிட்டு இருக்கிறார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications