ஆளே அடையாளம் தெரியாத அளவில் மாறிய பாடகர் ஹரிஹரன்.. இந்த நிலைமைக்கு காரணம் இதுவா?
சென்னை: பாடகர் ஹரிஹரன் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் இவரின் நிலைமையை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பாடகர் ஹரிஹரன் 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்கள் பலவற்றையும் பாடி இருக்கிறார். அதிலும் அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, கொஞ்ச நாள் பொறு தலைவா.. என்ற பல ஹிட் பாடல்கள் இப்ப கூட பலருடைய ஃபேவரைட் ஆக இடம் பிடித்திருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், சிங்களம், மைதிலி, பேஜ்புரி, ஒடிசா, பெங்காலி, சமஸ்கிருதம், குஜராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் ஹரிஹரன் பாடல்கள் பாடி இருக்கிறார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ என்னும் உயரிய விருதை பெற்றிருந்தவர். 1992 ஆம் ஆண்டு ஹரிஹரன் மற்றும் குல்சன் குமார் பாடிய ஹனுமான் பாடல்கள் இதுவரைக்கும் 3 பில்லியன் பார்வையாளர்களை தாண்டி பார்க்கப்பட்ட பக்தி பாடல்களாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஹரிஹரன் குடும்பமே பெரிய இசை பாரம்பரிய மிக்க குடும்பம் தான். ஏ எஸ் மணி மற்றும் அலமேலு மணி தம்பதியினருக்கு 1955 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஹரிஹரன் பிறந்திருக்கிறார். அதுபோல ஹரிஹரன் 8 வயதிலேயே தந்தையை இழந்ததால் மும்பையில் வளர்ந்தார். அங்கு தான் பள்ளி, கல்லூரி படிப்பை படித்து முடித்தார்.
1992 ஆம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மானின் ரோஜா படத்தில் தமிழா தமிழா என்னும் பாடலை பாடி பின்னணி பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பம்பாய் திரைப்படத்தில் உயிரே உயிரே பாடல் பாடியிருந்தார். அதுவும் பெரிய அளவில் ஹிட்டானது. அடுத்ததாக இவருக்கு முத்து, மின்சார கண்ணா, ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், இந்திரா, இருவர், அன்பே ஆருயிரே போன்ற பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய குரல் மற்றவர்களை விட தனித்து இருப்பது இவருக்கு சிறப்பாக இருக்கிறது.

அதுபோல 500க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களையும் 200க்கும் மேற்பட்ட இந்தி பாடல்களையும் பாடி பிரபலமடைந்த ஹரிஹரன் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி புது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தொடக்க விழாவில் ஸ்வாகதம் என்ற பாடலை பாடி இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த ஹரிஹரனை பார்த்ததும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். வயதான தோற்றத்தில் உடல்நிலை குன்றிய நிலையில் இருந்திருக்கிறார்.

அப்போது திடீரென்று மேடையை நோக்கி வந்து அருண்... அருண்... என்று அவர் கத்த முன் பக்கத்தில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் கண்ணீர் விட்ட ஹரிஹரன் மேடையில் ஏறியதும் காதலுக்கு மரியாதை படத்தில் அவர் பாடிய என்னை தாலாட்ட வருவாளா எனும் பாடலை பாடியதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியாகி ஆர்ப்பரித்தனர்.
இந்த வீடியோவை பார்த்ததும் ஹரிஹரனுக்கு என்னதான் ஆச்சு என்று பல ரசிகர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள். ஆனால் பிராங்க் செய்ததாக ஹரிஹரன் சமூக வலைத்தளம் மூலம் பதில் கொடுத்திருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications