நீயெல்லாம் ஏன் பாட்டு பாட வர்ற.. மேடையில் நடந்த அவமானம்.. கானா பாடகி இசைவாணி எமோஷனல்
சென்னை: கானா பாடகியான இசைவாணி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி கொண்டிருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு மேடை நிகழ்ச்சியில் கிடைத்த அவமானங்கள் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
கானா பாடகியான இசைவாணி பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அறிமுகமாக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம் பெற்ற பச்சைக் கல்லு மூக்குத்தி பாடல் இசைவாணி பாடியதுதான்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இசைவாணி ஒரு சில ஃபங்ஷனில் மட்டும் பாட்டு பாடி கொண்டிருக்கும் நிலையில் பெரிய அளவில் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் இசைவாணி புதிய வாய்ப்புகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் நான் ஒரு மேடையில் பாட்டு பாடிக்கொண்டிருந்தேன். அங்கு கீழே இருந்த ஒரு பெரியவர் "இதுக எல்லாம் பாட்டு பாட வந்துட்டு பாரு... கொஞ்சம் கூட வெட்கமில்லாமல்" என்று பேசிக்கிட்டு இருந்தார். எனக்கு அது காதுபட கேட்டது. ஆனாலும் நான் பாட்டை பாடி முடித்து விட வேண்டும் என்று பாட்டை பாடி முடித்துவிட்டு அந்த நபரை கூப்பிட்டு என்ன சொன்னீங்க என்று கேட்டேன்.

அவர் அப்போது "நீயெல்லாம் ஏன் பாட்டு பாட வர்ற, பொம்பள புள்ளையா வீட்டுல இருக்க முடியாதா? இதெல்லாம் பொம்பள புள்ள படிக்கிற பாட்டா? என்று கேட்க அதற்கு நான் அவரிடம் நான் பாட்டு படிக்கிறதில் உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிட்டது? பார்த்து படிக்கிறதுக்கு பொம்பள புள்ள ஆம்பள புள்ளனு என்ன வித்தியாசம் இருக்கு? உங்களுக்கு கேட்க விருப்பம் இருந்தால் கேளுங்கள் இல்லைன்னா போய்கிட்டே இருங்க என்று சொன்னேன்.
ஆனாலும் இந்த மாதிரி ஒரு சிலர் பேசுறது கேட்கும்போது மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஆனால் அப்போதுதான் இன்னும் நாம மேல வரணும் என்று சிந்தனை நமக்குள்ளே வந்து கொண்டே இருக்கும். நான் கானா பாட்டு பாடும் போது பலர் எனக்கு என்கரேஜ் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தான் இந்த மாதிரி தவறாக பேசவும் செய்கிறார்கள்.
கேரளாவில் நான் ஒரு முறை பாட்டு பாட போயிருந்த போது அங்கு ஐயப்பன் சாமிக்கான பாட்டு பாடும்போது அங்கிருந்த பெண்கள் அதை ரொம்பவே என்கரேஜ் பண்ணுனாங்க. நான் ஆரம்பத்தில் பாட்டு பாடி கிட்டு இருக்கும்போது என்கிட்ட ஐயப்ப சாமி பாட்டு பாட சொல்லி தான் கேட்டுட்டு இருந்தாங்க. அதுபோல நான் பீப் சாங் பாடும்போதும் கூட பெரிய அளவில் எனக்கு வரவேற்பு கிடைத்தது. இப்போது பல மேடைகளில் நான் பாடும் போது அந்த பாடலை பாட சொல்லி கேட்கிறவர்கள் ஏராளமானோர் இருக்காங்க என்று அந்த பேட்டியில் இசைவாணி பேசியிருக்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications