நீ இல்லாத வாழ்க்கை... மகளின் நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கம்.. வருத்தத்தில் பிரபலங்கள்
சென்னை: பாடகி சித்ரா தன்னுடைய மகள் இறந்து 13வது ஆண்டான நிலையில் உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
பாடகி சித்ராவின் ஒரே மகள் கடந்த 2011 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14ஆம் நாளில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து இருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய மகளின் நினைவுகளால் தவித்து வரும் கே.எஸ் சித்ரா தன்னுடைய வருத்தத்தை பதிவுகளாக வெளியிட்டு இருக்கிறார்.
பாடகி சித்ராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது மனதை வருடும் குரலுக்கு சொந்தக்காரனாக சித்ராவை சின்ன குயில் சித்ரா என்று அனைவரும் செல்லமாக அழைத்து வருவார்கள். பல பேர் மனதில் இருக்கும் கவலைகளை தன்னுடைய குரலாலே மறக்க செய்தவர் என்றால் மிகை ஆகாது. ஆனால் பாடகி சித்ரா வாழ்க்கையில் பெருந்துயரம் சூழ்ந்து இருக்கிறது..
சித்ராவிற்கு பல வருடங்களுக்குப் பிறகு நந்தனா என்ற ஒரு மகள் பிறந்தார். அந்த குழந்தையும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். சித்ரா அந்த குழந்தையின் மீது அதிகமான அன்பு செலுத்தினார். தான் எங்கு சென்றாலும் கூடவே அழைத்து சென்றார். அப்படித்தான் 2011இல் துபாயில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது தனது மகளையும் அங்கு அழைத்து சென்று இருக்கிறார்.

இப்போது அங்கு நந்தனா நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். யாரும் எதிர்பார்க்காத இந்த விபத்து தற்போது சித்ரா மனதில் நீங்காத ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய மகள் இறந்து 13 வருடங்கள் ஆன நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய மகள் நந்தனாவை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், எங்கள் இதயங்கள் நினைவுகளால் நிறைந்துள்ளன. உங்கள் பெயரை பெருமையுடன் பேசுகிறோம். நீ இல்லாமல் வாழ்க்கை சென்றாலும் அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. எங்கள் அன்பான நந்தனா மோலின் அன்பான நினைவாக.... என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் சித்திராவிற்கு ஆறுதல் கூறி, குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications