ஜெயம் ரவியின் மிகப்பெரிய ஃபேன் நான்.. அவங்க மனைவி ரொம்ப நல்லவங்க.. கெனிஷா கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) குடும்ப பிரச்சினை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரவி மோகன் அவருடைய மனைவியை பிரிந்த பிறகு பாடகி கெனிஷா உடன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரவி மோகன் மனைவி நீண்ட அறிக்கையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரவி மோகன் பற்றி பேசியிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.

பிரபலங்கள் வாழ்க்கை வெளியே தெரியாத வரைக்கும் தான் ரகசியமாக இருக்கும். பிரபலங்களின் சின்ன விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டால் அது பூதாகரமாக வெடிக்க தொடங்கிவிடும். சில நடிகர்கள், நடிகைகள் ஒன்றாக நடிக்கும் போது இவர்கள் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறதே, இவர்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று பலர் பேசுவதை பார்த்திருப்போம். அடுத்த சில மாதங்களுக்குள் அவர்களுக்குள் காதலும் வந்து திருமணமும் நடந்து விடுகிறது.
பிரபலங்களின் வாழ்க்கை
அதுபோல சில பிரபலங்களின் குடும்பத்தில் சாதாரண பிரச்சனை இருந்தாலும் அது வெளியே தெரிய தொடங்கிய பிறகு பூதாகரமாக வெடிக்க தொடங்கி விடுகிறது. அதுபோலத்தான் ரவி மோகன் குடும்ப பிரச்சனையில் இப்போது சோசியல் மீடியா பக்கம் பேசப்பட்டு வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியுடனான திருமண பந்தத்தில் இருந்து தான் விலகுவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் பாடகி கெனிஷாவுடன் அவர் பழகி வருவதால் இவர்கள் இருவருக்கும் காதல் அதனால் தான் ரவி மோகன் விவாகரத்து செய்யப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் பேசப்பட்டன.
ரவி மோகன் மறுப்பு
ஆனால் அதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவருமே மறுப்பு தெரிவித்திருந்தனர். நாங்க நல்ல நண்பர்கள் நாங்கள் இணைந்து ஹீலிங் சென்டர் தொடங்க போகிறோம் அதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் விளக்கம் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒரே வண்ண உடையில் கலந்து கொண்டனர். கணவன் மனைவி போல இவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்ததை பார்த்ததும் மொத்த சோசியல் மீடியா பக்கங்களும் இவர்களுடைய புகைப்படங்கள் மட்டும்தான் வலம் வந்தது.
ஆர்த்தி ரவி பதிவு
அதை பார்த்து கடுப்பான ரவிமோகனின் மனைவி ரவி மோகன் இப்போது என்னுடைய குழந்தைகளுக்கு அப்பா தான் எங்களுக்கு இன்னும் விவாகரத்து நடக்கவில்லை என்று நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது எனக்கு ஜெயம் ரவி (ரவி மோகன்) ரொம்பவும் பிடிக்கும். அவருடைய ரசிகை நான். என்னுடைய பாடல் நிகழ்ச்சிக்கு ஜெயம் ரவி தான் ஹெஸ்டாக வரப்போகிறார் என்று சொன்னார்கள் எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

ஜீவா செய்த ஏற்பாடு
அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது நடிகர் ஜீவா தான். ஜுவா எனக்கு பல வருடங்களாக நண்பராக இருக்கிறார். அவருடைய குடும்பத்தினரும் எனக்கு நன்கு தெரியும். ஜீவாவின் மனைவி ரொம்ப நல்லவங்க. அவங்க என்னிடம் ஃபேமிலி பிரண்ட் ஆக இருக்கிறாங்க. அவங்களுடைய ஏற்பாட்டில் தான் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஜெயம் ரவி வந்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அவங்க முன்னாடி நான் பாட போறேன் என்பது எனக்கு ஹாப்பியாக இருந்தேன்.
ஜெயம் ரவியின்(ரவி மோகன்) ரசிகை
பிறகு நான் பாடி முடித்ததும் வந்திருந்தவர்கள் யாரும் கைதட்டவில்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டு பாடினேன் ஆனால் யாரும் கைகட்டவில்லை, அய்யோ நல்லா இல்லையோ என்று அதிர்ச்சியா இருந்தது. அப்போது ஜெயம் ரவி தான் முதலில் பேச தொடங்கினர். பாடலைக் கேட்டு வியந்து போய் இருக்கீங்கன்னு தெரியுது அவரை பாராட்டலாம் என்று அவர் சொன்ன பிறகு எல்லோரும் கை தட்டி இருந்தார்கள். நான் எப்போதுமே ஜெயம் ரவியின் ரசிகை தான் என்று அந்த பேட்டியில் கெனிஷா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications