நேற்று ரவி மோகன் பற்றி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை.. இன்று கெனிஷா செய்த செயல்.. முடிவுக்கு வரும் பஞ்சாயத்து?
சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ரவி இருவரும் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பாடகி கெனிஷாவை வைத்து பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இன்று கெனிஷா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
பொதுவாக பிரபலங்கள் வீட்டு பிரச்சனைகள் வெளியே தெரியாத வரைக்கும் தான் அவர்கள் பற்றிய மதிப்பு, மரியாதையும் மக்கள் மனதில் இருக்கிறது. அதே நேரத்தில் அவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியே தெரிய ஆரம்பிக்கும் போது அவர்கள் பற்றி தேவையில்லாத பிம்பங்களும் உருவாக்குகிறது. ஆனால் நாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக அந்த பிரபலங்கள் தொடர்ந்து தங்களை நிரூபிக்க ஏதாவது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் நடிகர் ரவி மோகனின் குடும்பப் பிரச்சனையும் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

விவாகரத்து அறிவிப்பு
கடந்த வருடத்தில் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிய போவதாக அறிவித்திருந்தார். பிறகு இருவருடைய விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ரவி மோகன் இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் எந்த நடிகைகளுடனும் கிசுகிசுவில் சிக்காதவர் ஆனால் பாடகி கெனிஷாவுடன் நெருங்கி பழகி வருகிறார், அதனால்தான் மனைவியை பிரிகிறார் என்ற வதந்திகளும் பரவி வந்தது. இதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
ஆர்த்தி அறிக்கை
ஆனால் கடந்த வாரத்தில் இருவரும் ஒரு திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டனர். அதற்குப் பிறகு மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபமாக வெடிக்க தொடங்கியது. கெனிஷா மற்றும் ஜெயம் ரவியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ஆர்த்தி ரவி நான் இப்போதும் ஜெயம் ரவியின் மனைவிதான், என்னுடைய குழந்தைகளுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரவி மோகன் அறிக்கை
அதை தொடர்ந்து ரவி மோகன் நான்கு பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஆர்த்தி ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினரால் தான் முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்படுகிறேன் என்று பேசியிருந்தார். தன்னுடைய குழந்தைகளை பார்க்க விடாமல் தடுக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கெல்லாம் பதில் கொடுத்து நேற்று ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கெனிஷா செய்த செயல்
இதற்கிடையில் கெனிஷா தன்னைப் பற்றியும் ரவி மோகன் பற்றியும் அவர் ஆறுதலாக வரும் பதிவுகளை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவருக்கும் பாடகி சுசித்ரா உட்பட சிலர் சப்போர்ட் செய்து கொண்டு இருந்தனர். அந்த வீடியோக்களை கெனிஷா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வந்தார். ஆனால் நேற்று ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த எல்லா பதிவுகளையும் ஸ்டோரிகளையும் டெலிட் செய்திருக்கிறார்.

பதில் அறிக்கை
ஏற்கனவே ரவி மோகன் வெளியிட்ட பதிவு என்னுடைய "வாழ்வின் ஒளி" என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு நேற்று ஆர்த்தி வெளியிட்ட பதிவில், "உங்கள் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவரால் தான் எங்களுடைய வாழ்க்கையில் இருள் வந்துவிட்டது" என்று கூறி இருந்தார். அதுபோல "கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்றால் பெற்றோர் வீட்டிற்கு செல்லாமல் எதற்காக நம் குடும்பத்திற்குள் பிரச்சனை வருவதற்கு காரணமாக இருந்த பெண் வீட்டிற்கே போக வேண்டும்" என்று கேள்வி எழுப்பி இருந்தார். நேரடியாக கெனிஷா பற்றி ஆர்த்தி போட்ட பதிவால் இப்போது கெனிஷா இந்த முடிவு எடுத்து இருக்கிறாரா என்ற கேள்விகள் எழுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications