பிரபலங்களின் வாரிசு.. ஆனால் உருவகேலியால் பட்ட வேதனை.. பாடகி என்.எஸ்.கே ரம்யா எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டின் மூலம் பிரபலம் அடைந்த பாடகி என்.எஸ்.கே ரம்யா பல வருடங்கள் கழித்து தனக்கு ஏற்பட்ட உருவ கேலி குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
ரம்யா தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு முதலிய பலமொழிகளிலும் பல பாடல்களை பாடி இருக்கிறார்.

பாடகியாக பலருக்கும் அறிமுகமாகி இருந்தாலும் ரம்யாவின் முகத்தை உலகிற்கே காண்பித்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் 35 வது நாளில் ரம்யா வெளியேறி இருந்தார்.
சினிமாவில் நகைச்சுவை சக்கரவர்த்தியாக வலம் வந்த என்.எஸ் கிருஷ்ணன், நடிகர் ஆர் கே ராமசாமி மற்றும் நடிகை பிஏ மதுரம் ஆகியோரின் பேத்தி தான் பாடகி ரம்யா. இவர் பிரபலங்களின் வாரிசு என்று சொல்வதை விடவும் தனது திறமையின் மூலமாக பலருக்கும் தெரிய வேண்டும் என்று தனது தனித்துவத்தை நிரூபிப்பதற்காக பிக் பாஸ் இரண்டாவது சீசனில் ஒரு பாடகியாக உள்ளே நுழைந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய கேரக்டரை ரசிகர்கள் புரிந்து இருந்தாலும் இவர் ஆரம்பத்திலேயே 35 வது நாளில் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யாவின் பாடல்கள் பலராலும் பாராட்டப்பட்டது. அதோடு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் தன்னுடைய பாடலால் பல ரசிகர்களின் மனதை மயக்கி இருக்கிறார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருக்கும்போது பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்று நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்த ரம்யா இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் நிக்சன் வினுஷா தேவியை உருவ கேலி செய்தது குறித்து தன்னுடைய கருத்தை ரம்யா பகிர்ந்து இருக்கிறார்.
நிக்சன், வினுஷாவை பற்றி பேசியது ரொம்பவே தவறு. ஒருவருடைய அழகை வைத்து இந்த மாதிரி பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னையும் பல பேர் நான் குண்டாக இருக்கிறேன் என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள். யானை, மாடு என்றெல்லாம் என்னை என் காது படவே பேசி இருக்கிறார்கள்.

நான் நடந்து போகும்போது யானை கத்துவது போன்று சத்தம் போட்டு இருக்கிறார்கள். அதோடு என்னுடைய அழகை நானே ரசிக்க முடியாத அளவிற்கு நான் எதிர்மறையான பல கமெண்ட்களை கேட்டு இருக்கிறேன். நான் அழகா இல்லை என்ற கருத்து என்னுடைய மனதிற்குள்ளே ஆழமாக பதிந்திருந்தது. அந்த அளவிற்கு பலர் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
நான் குண்டாக இருக்கும்போது கூட என்னுடைய கணவர் நீ அழகாக இருக்கடி என்று சொல்லும் போது போ என்று நான் சொல்லும் மனநிலையில் தான் இருந்தேன். அப்போது 120 கிலோவில் இருந்த நான் இப்போது கடுமையாக உடற்பயிற்சி செய்து 60 கிலோவிற்கு வந்து இருக்கிறேன். குழந்தை பிறந்த பிறகு பி சி ஓ டி பிரச்சனையில் நான் இருந்தாலும் உடல் எடையை கவனமாக இருந்து இப்போது பிசிஓடி பிரச்சனையிலிருந்து நான் மீண்டு வந்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் ரம்யா பேசியிருக்கிறார்.
தனக்கு நடந்த உருவை கேள்வி குறித்து அந்தப் பேட்டியில் ரம்யா பேசியிருக்கும் நிலையில் பிரபலங்களின் வாரிசாகவும், தானும் பிரபலமாக இருக்கும் இவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமை சொல்லவா வேண்டும். பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டும் அல்ல உருவகேலி எல்லா இடத்திலும் இப்படித்தான் தலை விரித்து ஆடுகிறது என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications