ஆரம்பத்துல ரொம்ப பந்தா காமிச்சேன்.. ஆனால் இப்போ..! வெளிப்படையாக பேசிய ராஜலட்சுமி
சென்னை: மக்கள் இசை பாடகியான ராஜலக்ஷ்மி தான் படித்த கல்லூரியில் தன்னை பாடுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்த நிலையில் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது தான் ஆரம்பத்தில் ரொம்ப பந்தா காமித்து அலைந்ததாகவும் ஆனால் இப்போ தன்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என்றும் அதில் ராஜலட்சுமி பேசியிருக்கிறார்.
மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பின்னணிப் பாடகியாகவும் மாறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்திருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளும் தொடங்கியது. அதோடு கதாநாயகியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டார்.

ராஜலட்சுமி அவருடைய கணவரும் செந்தில் கணேஷும் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடி கொண்டிருக்கிறார்கள். அதுபோல மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல சமூக வலைதளத்திலும் செந்தில் கணேஷ் மற்றும் அவர்களின் மனைவி ராஜலட்சுமி இருவரும் ஆக்டிவாக இருக்கிறார்கள். அடிக்கடி போட்டோ புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை பார்த்து ஒரு சிலர் பாராட்டினாலும் சிலர் நெகட்டிவ் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
காரணம் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டவர்கள் இவ்வளவு முன்னேறிட்டார்களே என்பதுதான் அந்த கமெண்டில் பலருடைய குமுறலாகவும் இருக்கிறது. ஆனால் தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கமாண்டுகளை அசால்டாக கையாண்டு வரும் ராஜலட்சுமி இன்று தான் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.
அதில் நான் படித்த காந்தி கிராமம் கல்லூரியில் அவார்டு ஃபங்ஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எனக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமாக இருக்கிறோம் ஆனால் நம்ம காலேஜில் ஒருமுறை கூட நம்மை பாட்டு பாட கூப்பிடவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அந்த வருத்தம் எனக்கு இப்போ நிறைவேறி இருக்கிறது.

நான் மேடைகளிலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பின்னணிப் பாடகியாகவும் பாடிக் கொண்டிருக்கும் போது ரொம்ப பந்தா பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா இப்போது இயல்பை புரிந்து கொண்டேன். என்னுடைய கல்லூரியில் எனக்கு கிடைத்த வாய்ப்பு பெரியது என்று தான் நான் சொல்வேன். நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டாகத்தான் இருந்தேன்.
ஆனாலும் இந்த கல்லூரியில் ஆசிரியர்கள் கடைசி பெஞ்ச் மாணவர்களையும் கூட தமிழை பற்றி எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அளிக்கும் வகையில் மாற்றி விடுவார்கள். எங்கள் கல்லூரியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் நானும் பாட்டு பாடி இருக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த பெரிய வரம் என்று நான் சொல்வேன் என்று அந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications