பஸ்ல misbehave.. அன்னைக்கு நைட் 2 மணிக்கு.. அந்த வலி வேதனை இருக்கே.. பாடகி ராஜலட்சுமி எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராஜலட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு ஆரம்ப காலகட்டத்தில் நடந்த அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் நாட்டுப்புறப் பாடகியாக தான் பல ஊர்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பகாலத்தில் தனக்கு என்ன மாதிரி கஷ்டங்கள் ஏற்பட்டது என்றும் தன்னை மாதிரி இருக்கும் பாடகிகளுக்கு நடந்த கஷ்டங்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதோடு பெண்கள் வன்கொடுமை பற்றியும் பஸ்ஸில் போகும்போது பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்தும் அந்த பேட்டியில் ராஜலட்சுமி பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பலருடைய வாழ்க்கையை மாற்றி போட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக களம் இறங்கிய பல பிரபலங்கள் இன்று வெள்ளித்திரையில் ரெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றனர். அதுபோல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளர்களாக அறிமுகமானவர்கள் இப்போது பல திரைப்படங்களில் பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வரிசையில் ஒரு தம்பதி தான் ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ். அவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருந்தனர். அதற்கு முன்பு மக்கள் இசை பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் பாடிக்கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமாக இருந்த இவர்கள் பிறகு விஜய் டிவி மூலமாக தொலைக்காட்சியை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமாக மாறி இருந்தனர்.
அதைத் தொடர்ந்து ராஜலட்சுமிக்கும் செந்தில் கணேசனுக்கும் அடுத்தடுத்து பல வெள்ளித்திரை வாய்ப்புகளும் அமைந்து கொண்டே இருந்தது. இப்போது இவர்கள் பாடிய பல பாடல்கள் ஹிட் ஆகவும் இருக்கிறது. இந்த நிலையில் ராஜலட்சுமி இப்போது கதாநாயகியாகவும் மாறி இருக்கிறார். லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி தான் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாலியல் வன்கொடுமை குறித்து பேசி கொண்டிருந்தகொண்டிருந்த ராஜலட்சுமி ஆரம்ப காலகட்டத்திலும் சரி, இப்போதும் சரி, நீங்கள் மேடையில் பாடப்போகும் போது உங்களுக்கு உடை மாற்றுவதற்காக ஒரு இடம் ரெடி பண்ணி வைத்திருப்பார்கள்.
அது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ராஜலட்சுமி கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு காட்டு பகுதிகளில் தான் மேடை அமைத்து இருப்பார்கள். அப்போது நமக்கு தனியாக அறை வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. மேடைக்கு அருகிலேயே ஓலை வைத்து அடைத்து ஒரு புடவையோ அல்லது எதையாவது சுற்றிக்கொண்டு அங்கு தான் ட்ரஸ் மாற்றுகிற நிலைமை தான் இருக்கும்.

அது எனக்கு மட்டுமல்ல மேடை கலைஞர்கள் பலருக்கும் அந்த நிலைமையில் தான் இருக்கிறோம். அப்போது ஒரு சிலர் அந்த மேடைக்கு பின்பக்கத்தில் தான் வந்து நிற்பார்கள் இதுவெல்லாம் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் வேறு வழி இல்லை, நம்மை எங்கிருந்து பார்க்கிறார்களோ என்று பயந்தபடி தான் அந்த இடத்தில் இருந்து டிரஸ் மாற்றி விட்டு வர வேண்டியது இருக்கும்.
பல நேரங்களில் கச்சேரி முடிவதற்கு இரண்டு மணி மூன்று மணி ஆகிவிடும். அந்த நேரத்தில் பஸ்ஸில் போகும்போது ஸ்டேஜில் எப்படி மேக்கப்போடு இருந்தமோ அப்படியே பஸ்ஸில் போகும்போது இருப்போம். அப்போ ஒரு சிலர் நம்மை தவறாக பார்ப்பார்கள். நைட் இரண்டு மணிக்கு பஸ் ஸ்டாண்டில் நம்ம ஃபுல் மேக்கப் போடு போய் நிற்கும் போது அங்கு பார்ப்பவர்களின் பார்வை வித்தியாசமாக இருக்கும்.
பல நேரங்களில் பஸ்ஸிலிருந்து கூட நம்மிடம் தவறாக நடப்பதற்கு பலர் முயற்சிப்பார்கள். இதைப் பற்றி வெளியே சொன்னால் கூட ராத்திரி நேரத்தில் அந்த பொண்ணு எங்க போயிட்டு வந்ததுன்னு யோசிக்க மாட்டாங்க. ஆனா பிரச்சனை என்று வெளியில சொன்னா உடனே எல்லோரும் சொல்றது அந்த நேரத்துல எதுக்கு இவ்வளவு மேக்கப் போட போகணும் என்று கேள்வி கேட்பாங்க. இதுதான் ரொம்ப மோசமான செயல் என்று அந்த பேட்டியில் ராஜலட்சுமி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications