விவாகரத்துக்கு பிறகு சைந்தவியின் புதிய பயணம்: வனிதா கொடுத்த கமெண்ட்! விஜயகுமாரின் மற்ற மகள்களின் பதில்
சென்னை: கர்நாடக இசையையும், தென்னிந்திய திரை இசையையும் தனது குரலில் ஒன்றிணைத்துப் பாடிப் புகழ் பெற்றவர் பின்னணிப் பாடகி சைந்தவி. 12 வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய இவர், தமிழ் சினிமாவில், "அண்டங்காக்கா கொண்டக்காரி", "அச்சுவெல்லம்", "மஞ்சள் முகமே", "யார் இந்த சாலை" போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இவரும், இவரது பள்ளித் தோழரும், பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷும், கடந்த 2013-ல் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

விவாகரத்தும், புதிய தொடக்கமும்
கடந்த 2024, மே 13 அன்று, சைந்தவியும், ஜி.வி. பிரகாஷும், தங்களது விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த முடிவு, ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும், அவர்கள் இருவரின் தனிப்பட்ட முடிவை மதித்து, அவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர். திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் விலகி இருந்தாலும் இருவரும் நண்பர்களாக தொடர்ந்து வருகிறார்கள் பல நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து பாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
வைரலாகும் சைந்தவியின் புகைப்படங்கள்
விவாகரத்துக்குப் பிறகு, சைந்தவி தனது சமூக வலைதளப் பக்கங்களில், புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்தப் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, பல பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரபலங்களின் கருத்துக்கள்
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், சைந்தவியின் புகைப்படத்தைப் பார்த்து, "நீ ரொம்ப ஸ்டைலாகவும், அதே சமயம் நவீனமாகவும் இருக்கிறாய். சைந்தவி, நீ ஒரு கிளாசிக்" என்று புகழ்ந்துள்ளார். அதுபோல விஜயகுமாரின் இன்னொரு மகள் நடிகை ப்ரீத்தா ஹரி, "அருமையா இருக்குடா," என்று சைந்தவியைப் பாராட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து நடிகர் விஜயகுமாரின் இன்னொரு மகளான அனிதா விஜயகுமார், "உங்கள் லுக் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குமா. தொடர்ந்து அசத்துங்கள்" என்று கூறியுள்ளார்.
ரசிகர்களின் ஆதரவு
விவாகரத்திற்குப் பிறகு, சைந்தவி தனது வாழ்க்கையில் எடுத்துள்ள இந்தப் புதிய முயற்சிக்கு, ரசிகர்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். இசைப் பயணத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சைந்தவி சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திறையிலும் அசத்தி வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக கலந்து கொண்டு பலருடைய வாழ்க்கையிலும் ஏற்றத்திற்கு காரணமாக இருந்து வருகிறார். பல போட்டியாளர்களின் நிறை குறைகளை எடுத்து காட்டி அவர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சில போட்டியாளர்களுக்கு பல உதவிகளையும் சைந்தவி செய்து வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications