வயசான காலத்துல இது தேவையா? விஷாலை தொடர்ந்து அஜித்தை வம்பிழுத்த சுசித்ரா.. குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சுசித்ரா இன்ஸ்டாகிராம் லைவில் அஜித்குமார் கார் பந்தயத்தில் கலந்து கொண்டதை விமர்சித்து பேசி இருக்கிறார். இதற்கு இணையத்தில் அதிகமானோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் தமிழ் சினிமாவில் பலரையும் சுசித்ரா விமர்சித்து பேசி வருவதை பார்க்க முடிகிறது. தனுஷ் திரிஷா விவகாரத்தில் தொடங்கி வரிசையாக பல நடிகர்கள் நடிகைகள் பற்றி சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார்.

ajith kumar suchitra

சமீபத்தில் கூட விஷால் உடல்நிலை சரியில்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருடைய இந்த நிலைக்கு காரணம் அவருடைய தகாத பழக்கம்தான் என்றும் இரவு பாட்டிலோடு என்னுடைய வீட்டிற்கே வந்தார் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இவர் மீது திரையுலகில் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

விஷால் குறித்து சுசித்ரா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை சார்மிளா பல பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கிறார். சினிமாவில் யார் அதிகமாக பேசப்படுகிறார்களோ அவர்களைப் பற்றி சுசித்ரா ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார். தனக்கு வாய்ப்பு இல்லை என்பதற்காக சுசித்ரா இப்படி பேசிக் கொண்டிருக்கிறார், தன்னை பற்றி மக்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக தான் சுசித்ரா எந்த நடிகரை அல்லது நடிகையோ பிரபலமாக இணையத்தில் பேசப்படுகிறார்களோ அவர்களை பற்றி உடனே ஒரு வீடியோ போட்டு விடுகிறார் என்று கூறியிருந்தார்.

இப்படியான நிலையில் அஜித்குமார் பற்றி சுசித்ரா பேசியிருக்கிறார். சமீபத்தில் துபாயில் நடந்த 24 ஹெச் கார் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. நடிகர் அஜித்குமார் சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய கனவை நோக்கி இன்னொரு பக்கம் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த பயணத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் சுசித்ரா அஜித்துக்கு இந்த வயதான காலத்தில் இது தேவையா? என்று இன்ஸ்டாகிராம் லைவில் பேசியிருக்கிறார். சினிமாவில் நடனம், சண்டை போட முடியாதவர்களுக்கு இந்த வயசான காலத்தில் கார் ரேஸ் தேவையா? கார் ரேஸில் அதிகப்படியான பணத்தை கொண்டு போய் கொட்டாமல் தமிழ்நாட்டில் ஏழை குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யலாமே?

விஷாலை விட அஜித்தை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது என்று சுசித்ரா அதில் பேசியிருந்தார். சமீபத்தில் எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் கடவுளே அஜித்தே.. என்று அதிகமான ரசிகர்கள் அஜித் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு அஜித் வாழ்க... விஜய் வாழ்க என்று சொன்னால் நீங்கள் வாழ முடியுமா? உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும்.

உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையானதை நீங்கள் முதலில் செய்யுங்கள். அதற்குப் பிறகு நடிகர்களுக்குகாக நீங்கள் உங்கள் அன்பை செலுத்துங்கள். முதலில் உங்களுடைய குடும்பத்தினரை கவனியுங்கள் என்று பேசி இருந்தார். அப்படி இருந்தும் சுசித்ரா இப்போது அஜித்குமார் பற்றி இப்படி பேசி இருப்பது குறித்து பலர் சுசித்ராவை திட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+