சுசித்ரா இறக்கிய இடி.. ஸ்ரீகாந்த்தை அடுத்து யாரந்த டாப் ஸ்டார்? இளம் இசையமைப்பாளருமா? பிரபலம் நறுக்
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் கைது விவகாரம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும்நிலையில், போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக மேலும் சில பிரபலங்கள் சிக்கலாம் என்கிறார்கள். இந்நிலையில், இசையமைப்பாளர், விஜய் ஆண்டணி, பாடகி சுசித்ரா உள்ளிட்டோரும் தங்களது கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி செய்தியாளர்களிடம் கூறும்போது, "இன்னைக்கு நேத்து இல்ல, இப்போ நம்முடைய கூட்டத்தில் கூட ஒருவருக்கு போதைப்பழக்கம் இருக்கலாம். பல நாட்களாகவே சினிமாவில் போதைப்பழக்கம் இருக்கிறது" என்று கூறியிருந்தது பலரது கவனததை பெற்று வருகிறது.

சுசித்ரா பேட்டி
அதேபோல, ஊடகம் ஒன்றுக்கு பாடகி சுசித்ரா அளித்திருந்த பேட்டியில், "திரைத்துறையை பொறுத்தவரை போதைப் பொருட்களை பயன்படுத்தும் யாருமே ரத்த பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? தெரியவில்லை.
மும்பை போன்ற இடங்களில் இருந்து சில கவுரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வருபவர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். மும்பையில் எல்லாம் காலையில் பல் விளக்குவது போல நாங்கள் இதை பயன்படுத்துவோம் என்று சொல்லி அவர்கள் இந்த கலாச்சாரத்தை திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர்.
மும்பையில் இருந்து வரும் நடிகர்கள் வெறும் நடிப்பதற்காக மட்டும் இங்கு வருவதில்லை. அங்கிருந்து வரும் நடிகர்கள் இங்கு எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு மும்பைக்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களைப் பற்றி இங்கு யாருமே பேசுவது கிடையாது" என்றெல்லாம் கூறியிருந்தது, மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருந்தது.
விஜய் ஆண்டணி சொல்ல வருவது என்ன
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஸ்ரீகாந்த்தை தவிர்த்து மற்றவர்களும் போதைப்பொருளை திரையுலகில் பயன்படுத்துகிறார்கள் என்பதை சிலர் சொல்ல முன்வருகிறார்கள்..
விஜய் ஆண்டனியும் அதைத்தான் சொல்ல வருகிறார்.. அவர் பேசும்போது, "நிறைய பேர் போதைப்பொருளை சினிமாவில் பயன்படுத்துகிறார்கள், இந்த மேடையிலும் பயன்படுத்துபவர்கள் இருந்தாலும் இருக்கலாம்' என்கிறார்.. அப்படியானால், அந்த மேடையில் மொத்தம் 10 பேர்தான் இருப்பார்கள்.. அந்த 10 பேரிலும் ஒருவர் இருக்கலாம் என்றால், போதைப்பொருளின் பயன்பாடு அதிகம் என்பதையே விஜய் ஆண்டனி சுட்டிக் காட்டியிருக்கிறார்.
நடிகைகள் போதைப்பொருள்
முன்னணி நாளிதழில், பல நடிகைகள் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள், ஒரு இளம் இசையமைப்பாளர் இதை பயன்படுத்தினால்தான், இசையமைக்கவே வரும் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி வதந்திகளை வைத்து, இவர்தான், அவர்தான் என்று உறுதி செய்ய முடியாது.அப்படி பேசவும் கூடாது.
30 வருடங்களுக்கு முன்பு, சில நடிகர்கள், நுடிகைகள் ஷூட்டிங்குக்கே குடித்துவிட்டுதான் வந்தார்கள்.. படப்பிடிப்பில் பிரேக் நேரத்தில் குடிப்பார்கள்.. ஆனால் யாருக்குமே தொந்தரவு செய்ய மாட்டார்கள். இதை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இது பல காலமாகவே இருக்கிறது.. ஆனால், இதே சினிமாவில்தான், சிவக்குமார், அரவிந்த்சாமி, மம்முட்டி, ஏஆர் ரஹ்மான் போன்றோர் எல்லாம் ஒழுக்கமாகவும் இருக்கவே செய்கிறார்கள்.
மாஸ் மீடியா என்பதால், சினிமாவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது. அதனால்தான், ஸ்ரீகாந்த் கைது கூட அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது.
சரக்கு பாட்டில் - போதை கலாச்சாரம்
ஆரம்பத்தில் வெறும் சரக்கு பாட்டில் பயன்படுத்திய நிலையில், இன்று வேறு வகையான போதைப்பொருட்கள் வந்துவிட்டன.. இந்த போதை கலாச்சாரம், கொரோனா காலகட்டத்தில்தான் அதிகரித்ததாக சொல்கிறார்கள்.
ஏனென்றால், டாஸ்மாக்கை மூடிவிடுவதால், எப்படியாவது போதையை தேடிக்கொள்வது என்ற முடிவுக்கு மதுப்பிரியர்கள் வரும்போது, கஞ்சாவை சிலர் தேடி செல்ல நேரிடுகிறது. அதிலும் கஞ்சாவின் விலை குறைவு என்பதால், மது பழக்கத்திலிருந்து போதைப்பழக்கத்திற்கு, கொரோனா நேரத்தில் சில குடிமகன்கள் மாறியதாகவும் சொல்கிறார்கள்.
சுசித்ரா சொல்வது உண்மையா
பாலிவுட்டில் இருந்து சிலர் நடிப்பதற்காக கோலிவுட் வருவதால், அவர்கள் மூலம் இந்த கலாச்சாரம் பரவியதாக பாடகி சுசித்ரா சொல்லியிருக்கிறார்.. ஆனால், சுசித்ரா சொல்வதை ஏற்க முடியாது.. ஒருகாலத்தில் பாலிவுட் என்பதை அண்ணாந்து பார்த்தோம். இன்று கோலிவுட்டில்தான், ஆகச்சிறந்த டெக்னிஷியன்கள், ஆகச்சிறந்த படங்கள் வர ஆரம்பித்து விட்டன.
500 கோடி ரூபாயில் பெரிய வியாபரம் செய்கிறோம், 700 கோடி கலெக்ஷனை எடுக்க ஆரம்பித்துவிட்டோம். எனவே உலக அளவில் தமிழ் படங்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. அப்படியிருக்கும்போது, பாலிவுட்டில் இருந்துதான், இந்த போதையை அறிமுகப்படுத்தி விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் அங்கிருந்து வந்து நடிப்பதால், இதை தெரியப்படுத்தியிருக்கலாம்.
அப்புறப்படுத்த வேண்டும்
நம்முடைய தமிழ் நடிகர்கள் அன்று மலேசியா, சிங்கப்பூர் சென்றதே பெரிய விஷயமாக இருந்தது. இன்று உலகம் முழுவதும் நம்முடைய தமிழர்கள் செல்கிறார்கள்.
மற்றொருபக்கம் கிளப், பார், கெட் டூ கெதர், சோஷியல் கெட் டூ கெதர், என்று தமிழ்நாடு தவிர் அனைத்து மாநிலங்களிலுமே நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, இந்த போதைப்பொருள் கலாச்சாரம், எங்கிருந்து வந்தது என்பதைவிட, இதை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முக்கியம்" என்கிறார்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications