Single Pasanga: ஜீ தமிழ் நிகழ்ச்சியை விட்டு விலகிய பார்த்திபன்! பதிலாக வந்த டி ராஜேந்தர்! முதல் வாரமே சொன்ன வார்த்தை
சென்னை: தமிழ் சின்னத்திரையில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி 'சிங்கிள் பசங்க'. இதுவரை நடிகர் பார்த்திபன், நடிகைகள் ஆலியா மானசா மற்றும் ஸ்ருதிஹா அர்ஜுன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது நடுவர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல், நடிகர் பார்த்திபனுக்குப் பதிலாக நடிகர் டி.ஆர். ராஜேந்தர் மற்றும் நடிகை கனிகா ஆகியோர் நடுவர்களாகக் களமிறங்கி, நிகழ்ச்சியை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பன்முக கலைஞர் பார்த்திபன்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட பார்த்திபன், தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'என் வாழ்வின் கார்காலம்' என்ற தலைப்பில் ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டு இருந்தார். ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் 'சிங்கிள் பசங்க' என்ற நிகழ்ச்சியில், ஜட்ஜாக இருக்கும் அனுபவத்தைப் பற்றி அவர், தனது தனித்துவமான பாணியில் பேசி இருந்தார்.
பார்த்திபன், 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்த அனுபவத்தைப் பற்றி, "அது ஒரு புது அனுபவம். ஒரு திட்டமிட்ட கொலையை, திட்டமில்லாத முறையில் செய்வதுபோல, அந்த இடத்திலேயே, எதிர்பாராத கமெண்ட்ஸ்களை, நெருப்பில்லாமல் புகையாக, அடுப்பில்லாமல் கடாயாக, கடாயில்லாமல் வடையாகச் சுட்டுத் தள்ளிக்கொண்டே இருந்தேன்," என்று பதிவிட்டு இருந்தார்
நெருப்பு நாற்காலி
மேலும், அவர், "அந்த நிகழ்ச்சியில், நடுவராக இருப்பது ஒரு பெரிய வித்தைதான். நெருப்பு நாற்காலியில், முள் கிரீடமணிந்து, இரண்டு பெண் நடுவர்களுக்கிடையே இருப்பது ஒரு பெரிய பொறுப்பாக இருந்தது," என்று கூறியுள்ளார். "அடுத்த எபிசோடில், பார்வையாளராக அமர்ந்து அங்கிருந்தபடியே கமெண்ட்ஸ் அடிக்கலாம் என்று இருக்கிறேன். உண்மையில், ரசிகர்களே சிறந்த நீதிபதிகள்," என்று அந்த பதிவில் கூறியிருந்தார். ஆனால் சில வாரங்களில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து காணாமல் போனது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி இருக்கிறது.
புதிய நடுவர் கூட்டணி
அதுபோல இந்த வாரம் நடுவராக வரும் டி ராஜேந்தர் தனது தனித்துவமான பேச்சு நடை, அதிரடி வசனங்கள், மற்றும் அள்ளித் தெளிக்கும் அட்சரங்களால் ரசிகர்களைக் கட்டிப் போடும் இவர், 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் நடுவராக வந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய ஸ்டைலில் போட்டியாளர்களைப் பாராட்டுவதும், தன்னுடைய கடந்த கால அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்வதும் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
கனிகா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் 'எதிர்நீச்சல்'-ல் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா, இந்த நிகழ்ச்சியின் புதிய நடுவராக இணைந்துள்ளார். ஒரு நடிகையாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது. இந்த இரு புதுமையான நடுவர்களுடன், ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகை ஆலியா மானசாவும் தொடர்ந்து நடுவராகப் பயணிக்கிறார். இந்த மூவரின் கூட்டணியும் நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் மாற்றியுள்ளது.
போட்டியாளர்களின் அதிரடி
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு நடுவர்கள் மட்டுமல்லாமல், போட்டியாளர்களும் ஒரு முக்கியக் காரணம். தன்னுடைய தனித்துவமான கிராமிய நகைச்சுவையாலும், எதார்த்தமான பேச்சாலும் கூமாப்பட்டி தங்கதுரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அவருடைய ஒவ்வொரு பேச்சும், உடல்மொழியும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகப் பரவி வருகின்றன. தனது நகைச்சுவைத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து, ஒரு சின்னத்திரை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பிளக்கி ஸ்டார்-ம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் சுவாரசியமான தருணங்கள், போட்டியாளர்களின் நகைச்சுவையான செயல்கள், மற்றும் நடுவர்களின் வித்தியாசமான கருத்துக்கள் ஆகியவை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன. இந்த புதிய நடுவர் கூட்டணியால், 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சி இன்னும் பல உயரங்களை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications