சிறகடிக்க ஆசை: அந்த பையன் என்ன பிறப்போ? விஜயா கொட்டிய வார்த்தை.. கொந்தளித்த ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து மற்றும் மீனா ரோகிணியின் மகன் கிரிஷை வீட்டிற்கு கூட்டிட்டு வருவதை பார்த்து கோபமான விஜயா திட்ட, அதைக் கேட்டு ரோகிணி கோபமாகி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் கல்யாணி, ரோகிணி என்ற பெயரோடு விஜயாவின் வீட்டில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே தனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்பதை மறைத்து மனோஜை கல்யாணம் செய்து இருக்கும் ரோகிணியை பெரிய பணக்கார வீட்டு பொண்ணு என்று நினைத்து விஜயாவும் அவருக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அவருடைய உண்மை ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு தெரியாமல் ரோகிணி தப்பித்துக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ரோகிணியின் மகன் க்ரிஷ்க்கு அடிபட்டிருக்கும் நிலையில் ஆபத்தான முறையில் க்ரிஷ் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது மீனா மற்றும் முத்து ஹாஸ்பிடல் வந்திருந்த நிலையில் அவர்கள் க்ரிஷை பார்த்து அவருக்கு துணையாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான வீடியோவில் கிரிஷையும் அவருடைய பாட்டியையும் முத்துவும் மீனாவும் வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர். இதை பார்த்து விஜயா கோபப்பட்டு திட்டுகிறார். இவங்களை வீட்டில் கூட்டிட்டு வந்து தங்க வைப்பதற்கு எங்கே ரூம் இருக்கிறது? இது என்ன சத்திரமா? எல்லா ஹாஸ்பிடல் வார்டா என்று கேட்டு திட்டுகிறார். அதற்கு மீனாவும் முத்துவும் நாளைக்கு இந்த பையனுக்கு கண்ணில் கட்டி இருக்கும் கட்டை கழட்டி விடுவாங்க.

அதற்குப் பிறகு அவங்க போயிடுவாங்க. அதுவரைக்கும் இங்க தங்கி இருக்கட்டும் என்று சொல்ல, கோபமான விஜயா ரோகிணி இடம் அந்தப் பையனை வேற தூக்கிக்கிட்டு வந்திருக்காங்க. அது என்ன பொறப்புனு தெரியல.. என்று விஜயா சொன்னதும், ரோகிணி ஆன்ட்டி... என்று கத்துகிறார். இதனால் ரோகிணி உணர்ச்சி வசப்பட்டு கிரிஷ் விஷயத்தில் உண்மையை உளறுவாரா? என்ற எதிர்பார்ப்பு வருகிறது.
அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் கிரிஷை பார்க்க வந்த ரோகிணி இடம் முத்து கிருஷ் அத்தை வெளிநாட்டில் இருக்கிறாங்க. அவங்க மட்டும் என் கண்ணு முன்னாடி வந்து அவங்கள அடிப்பேன் என்று சொல்லும் போதும் ரோகிணி நீ கோவப்பட்டு இருக்கிறார். இதனால் இதை வைத்து முத்து மற்றும் மீனா சந்தேகப்படுவார்களா? அதனால் உண்மை வெளியே வருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications