மீனா ஆர்டரை கெடுக்க சிட்டி போட்ட பிளான்.. ஸ்ருதி செய்த சிறப்பான செயல்.. உண்மையை கண்டுபிடித்த முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து மற்றும் மீனாவை பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்த சிட்டிக்கு சத்தியா முத்து மற்றும் மீனாவிற்கு வந்த மாலை ஆர்டர் பற்றி சொல்ல சிட்டி ரௌடிகளை வைத்து புது பிளான் போடுகிறார்.

அதே நேரத்தில் மீனாவின் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என விஜயா, ஸ்ருதியை வைத்து பிளான் போட ஸ்ருதி மொத்த குடும்பத்தின் முன்பு விஜயாவை அவமானப்படுத்தி விடுகிறார்.

Siragadikka aasai march 11th Episode and promo full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரவி கிச்சடி செய்வதற்காக ரெடியாகும் போது முத்து நான் ஏதாவது உதவி செய்யணுமான்னு கேட்க அதற்கு ரவி காய்கறியை வெட்டி கேட்கிறார். அதோடு கிச்சடிக்கு தேவையான வேர்க்கடலையை தோல் உரிக்கணும் என்று சொல்ல அப்போது மனோஜை கூப்பிட்டு தோல் உரிக்க சொல்கின்றனர். ஆனால் மனோஜ் நான் என்ன படித்திருக்கிறேன் என் படிப்புக்கு பின்னாடி இருக்கிற டிகிரியை நீ வெளியே இருக்கிற போர்டில் போய் பார்த்துட்டு வந்து என்னை வேலை வாங்கு.

நான் உனக்கு வேலை செஞ்சு தரணுமா என்று திமிராக பேசுகிறார்? அதோடு ரவியை நீ சமையல்காரன் தானே என்று பேச அதற்கு முத்து ரவிக்கு ஆதரவாக சப்போர்ட் பண்ணி மனோஜை திட்டுகிறார். அதற்கு மனோஜ் எனக்கு இந்த கிச்சடி எல்லாம் வேண்டாம் நானும் ரோகிணியும் வெளியே ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்குவோம் என்று சொல்லிவிடுகிறார். ரோகிணியும் அதுபோல ஆமா எனக்கு கிச்சடி எல்லாம் பிடிக்காது என்று சொல்லிவிடுகிறார்.

Siragadikka aasai march 11th Episode and promo full update

அடுத்ததாக ரவி சாப்பாடை செஞ்சு முடித்ததும் எல்லோரும் ஆகா ஓகோ என்று பாராட்டி சாப்பிடுகின்றனர். பிறகு ரோகிணியால் வெளியே ஆர்டர் பண்ண முடியாமல் போய்விடுகிறது. இதனால் மனோஜ் கிச்சடியை சாப்பிட வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் கிச்சனுக்குள் வர அங்கு ரோகிணி மறைந்திருந்து சாப்பிட்டுக்கொள்கிறார். பிறகு இருவரும் மாட்டிக்கொண்டு திருதிருவென முழித்து கொண்டு பிறகு இருவரும் சேர்ந்து திருட்டுத்தனமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் அங்கே வரும் முத்து இவர்களை பார்த்து எதுவுமே சொல்லாமல் அவர்களுக்கு தண்ணீரை மட்டும் பிடித்து வைத்து விட்டு போகிறார். அடுத்த கட்டத்தில் ரவியிடம் சீதா கிச்சடி அருமையாக இருந்தது என்று பாராட்டி கை கொடுக்க அதை பார்த்த விஜயா கோவப்பட்டு சீதாவை திட்டி அனுப்புகிறார். பிறகு ஸ்ருதியிடமும் சீதாவை பற்றி தப்பு தப்பாக சொல்லி இப்படி கல்யாணம் ஆன ஒரு பையனுக்கு கல்யாணம் ஆகாத பொண்ணு கை கொடுக்கிறது சரியா என்று ஏத்தி விடுகிறார்.

Siragadikka aasai march 11th Episode and promo full update

உடனே ஸ்ருதி ரூமை விட்டு வெளியே வந்து எல்லாரிடமும் ரவியும் சீதாவும் கையை கொடுத்தது உங்களுக்கு யாருக்காவது தப்பா தோணுகிறதா என்று கேட்க இதை கேட்டு அதிர்ச்சியான ரவி ஸ்ருதியை மேற்கொண்டு பேச விடாமல் தடுக்கிறார். ஆனால் ஸ்ருதி தன்னுடைய கேள்வியில் உறுதியாக மீண்டும் எல்லோரிடம் கேட்கிறார். எல்லோரும் எங்களுக்கு அப்படி தப்பா தெரியல எங்களுக்கு சீதாவை பற்றி நல்லாவே தெரியும் என்று சொல்கின்றனர்.

அதற்கு ஸ்ருதி விஜயாவிடம் உங்களுக்கு வேணும்னா உங்க பையன் மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு என் புருஷன் மேல நம்பிக்கை இருக்கிறது உங்க காலம் மாதிரி இப்ப கிடையாது. இப்போ ஒரு பொண்ணும் பையனும் கையை கொடுத்து பேசுறது ஒன்னும் தப்பு கிடையாது என்று நோஸ்கட் பண்ணி விடுகிறார். அடுத்ததாக சிட்டி குடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு
சத்தியா வருகிறார்.

Siragadikka aasai march 11th Episode and promo full update

அங்கு எனக்கும் டம்ளரில் சரக்கு ஊத்துங்க என்று சொல்ல அதற்கு சிட்டி நீ குடிச்சிட்டு போனா ஏதாவது பிரச்சனை ஆயிடும் என்று சொல்ல, வீட்டில் சீதா, மீனா வீட்டுக்கு போயிட்டா, அம்மா மட்டும்தான் வீட்ல இருக்காங்க, அம்மாவும் இப்போ தூங்கிருப்பாங்க என்று சொல்கிறார். எதற்காக சீதா, மீனா வீட்டுக்கு போனா என்று சிட்டி கேட்க,

அதற்கு மீனா அக்காவுக்கு முத்து மாமாவால 500 மாலை கட்ட ஆர்டர் கிடைச்சிருக்கு அதனால எல்லாரும் அங்கிருந்து வேலை பார்த்துட்டு இருக்காங்க என்று சொல்ல, அதை கேட்ட சிட்டி இதுதான் முத்துவை பழிவாங்க சரியான சந்தர்ப்பம். நாளைக்கு புது ரவுடிகளை இறக்கி அவன் வண்டியை தூக்கிரனும் என்று பேசிக் கொண்டிருக்க சக்தியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+